செம்புப் பாத்திர தண்ணீர் குடிப்பது ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறதா?sembu kudineer palangal

2030-களில் நீரழிவு நோய் தான் மரணத்திற்கு ஏழாவது முக்கிய காரணமாக இருக்கும் என டபிள்யு.ஹெச்.ஓ கணித்துள்ளது

டயபட்டீஸ் மெல்லிடஸ் என்பது இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதை குறிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் (டபிள்யு.ஹெச்.ஓ) படி, பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களிடத்தில் நீரழிவு நோயின் பாதிப்பு 1980-ல் 4.7 சதவிகிதத்திலிருந்து 2014-ல் 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2030-களில் நீரழிவு நோய் தான் மரணத்திற்கு ஏழாவது முக்கிய காரணமாக இருக்கும் என டபிள்யு.ஹெச்.ஓ கணித்துள்ளது. தாமதமான சிகிச்சை மற்றும் போதிய விழிப்புணர்வின்மை தான் நீரழிவு நோயை கடினமாக்குகிறது.

நீரழிவு நோய் மேலாண்மையை மேலும் சிக்கலாக்குவது அதைச் சுற்றி உலவும் கட்டுக்கதைகள் தான். நீரழிவு நோய் இல்லாதவருக்கு, இரத்த சுகரின் அளவு 100 எம்ஜி/டிஎல் குறைவாக இருக்க வேண்டும். உங்களுடைய இரத்த சுகர் அளவு தொடர்ச்சியாக அதைவிடவும் அதிகமாக இருந்தால் நீங்கள் ஒரு நிபுணரை கலந்தாலோசித்து, தேவைப்பட்டால் உரிய மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டிலேயே நீரழிவு நோயை சமாளிக்க நீங்கள் நிறைய விஷயங்கள் செய்யலாம். அதில் ஒரு சிறந்த வீட்டு மருத்துவம் என்னவென்றால், செம்புப் பாத்திர தண்ணீர் குடிப்பது.


செம்புப் பாத்திரத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை குடிப்பது இந்தியாவில் உள்ள ஒரு பழமையான நடைமுறை. உண்மையில், இது நமது நாட்டின் பழமையான நீர் சுத்திகரிப்பு முறைகளில் ஒன்றாகும். செம்புத் தண்ணீர் குடிப்பதனால் நிறைய பலன்கள் இருக்கின்றன. இது தண்ணீரில் உள்ள நுண்ணுயிர் கொல்லிகள், பூஞ்சை, ஆல்கை மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் செம்புப் பாத்திரத்தில் நீரை இரவு அல்லது நான்கு மணி நேரத்திற்காவது சேமித்து வைப்பது செம்பின் சில நன்மைகளை தண்ணீரில் பெற வழிவகைச் செய்கிறது.

மனித ஆரோக்கியத்திற்கான நல்வாழ்விற்கு செம்பு அடிப்படையான தேவையாக இருக்கிறது. ஆனால் நம்முடைய உடம்பால் சொந்தமாக தாமிர சத்தை உற்பத்தி செய்ய முடியாது, அதனால் தான் நம்முடைய உணவின் மூலமாக அதை உட்கொள்ள வேண்டியிருக்கிறது.

செம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் நோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு, காயத்தை குணப்படுத்துதல், சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் செல் வளர்ச்சி போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது. நீரழிவு நோய் பெரும்பாலும் தோல் பிரச்சனைகள், மெதுவாக குணமாகுதல் மற்றும் வீக்கம் ஆகியவற்றை உருவாக்குகிறது. இந்த இடத்தில் தான் செம்புத் தண்ணீர் பயனுள்ளதாக இருக்கிறது. செம்பை மற்ற சத்துக்களான மக்னீசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றோடு சேர்த்தால் அது சுகர் அளவை ஒழுங்குப்படுத்தவும் உதவும்.

sembu pathira kudineer


ஆயுர்வேதத்தின் படி, செம்புத் தண்ணீர் ஜீரணத்தை மேம்படுத்துவது தோல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது, பேக்டீரியாக்கள் மற்றும் வீக்கத்தை எதிர்த்து சண்டையிடுவது போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று நீரழிவு நோயை சிறப்பாக சமாளிக்க பயன்படுவது. டாக்டர் வசந்த் லேட்டின் ‘தி கம்ப்ளீட் புக் ஆஃப் ஆயுர்வேதிக் ஹோம் ரெமிடீஸ்’ செம்புத் தண்ணீர் குடிப்பது காஃப்பா வகை குறைபாடுகளை சமாளித்து அதிக இரத்த சுகரை எதிர்க்கும் தன்மைகளை அதிகரிப்பதாக தெரிவிக்கிறது. “இரவு செம்புப் பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை வைத்து அதை மறுநாள் காலையில் குடியுங்கள்” என வசந்த லேட் குறிப்பிடுகிறார்.

நீரழிவு நோய் நிபுணர் ரோஷானி கட்ஜே கூறுகையில், “செம்பு மற்றும் இரத்த சுகர் அளவு இவைகளுக்கு இடையே நேரடி தொடர்பு இல்லையென்றாலும், தாமிர குறைபாடு க்ளுக்கோஸ் அதிகரிப்பு, வீக்கம், சோர்வு மற்றும் மெதுவாக குணமாகுதல் உள்ளிட்ட நீரழவிற்கான பொதுவான அறிகுறிகளை அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது. எனவே செம்புப் பாத்திரத்திலிருந்து தண்ணீர் குடிப்பது சில நன்மைகளை அளிக்கும் என நம்பப்படுகிறது. எனினும் செம்பு மற்றும் சர்க்கரை இரண்டிற்கும் இடையே இருக்கும் தொடர்பை அறிய இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன".

sembu kudineer palangal


நீரழிவு நோய் மேலாண்மை என்பது எளியகாரிமல்ல என்றாலும் அவ்வளவு கடினமான விஷயமும் அல்ல. ஆரோக்கியமான மற்றும் ஒழுங்கான உணவுப் பழக்கம் மற்றும் ஃபிட்டான வாழ்க்கை முறை நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.

Post a comment

0 Comments