கொரோனாவுக்கு 'தமிழகத்தில்' முதன்முறையாக... 'முப்பது' வயதுக்கு உட்பட்ட பெண்கள் 'உயிரிழப்பு'... 'அதிர்ச்சி' தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிக பாதிப்பாக இது பதிவாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் மட்டும் இந்த வைரசிற்கு 12 பேர் பலியாகினர். இந்நிலையில், இன்று உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவார். தமிழகத்தில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்றிற்கு 30 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமியும், வேலூரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் பலியாகியுள்ளனர்.

ஒருபக்கம் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், முப்பது வயதுக்கு கீழ் ஏற்பட்ட இந்த மரணம் மக்களை மேலும் பீதியடைய செய்துள்ளது.

corono thottru


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிக பாதிப்பாக இது பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 1,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதில், சென்னையில் மட்டும் இன்று கொரோனாவால் 1,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன் காரணமாக கொரோனா தொற்று மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.

இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 16,964 ஆண்களும், 10,278 பெண்களும், 14 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது. இன்று இந்த கொடிய வைரசிற்கு தமிழகத்தில் 12 பேர் பலியான நிலையில், தமிழகத்தில் இதுவரை இந்த வைரசிற்கு பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. இன்று 585 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ,901 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 12,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போதுவரை 5,44,981 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments