ஃபேஸியல் யோகா: உங்கள் முகத்தை பொலிவூட்ட ஒரு இயற்கையான வழி

தினசரி வாழ்க்கையில் யோகாவின் முக்கியதுவத்தை உணரச் செய்ய பிரதமர் நரேந்திர மோதி ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்தார்

தினசரி வாழ்க்கையில் யோகாவின் முக்கியதுவத்தை உணரச் செய்ய பிரதமர் நரேந்திர மோதி ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்தார். இத்தினம் வட அரக்கோளத்தின்(Northern hemisphere)மிக நீண்டநாள் என்பதால் தேர்வுச் செய்யப்பட்டது.மேலும் உலகின் பல பகுதிகளில் இந்நாள் சிறப்பு முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.

யோகா நாம் அனைவரும் அறிந்தது போல மூளைக்கும் மனதிற்கும், சிந்தனைக்கும் செயலுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதோடு மனிதனுக்கும் இயற்க்கைக்கும் நல்ல ஒற்றுமையையும் குறிக்கிறது.இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு முழுமையான அணுகுமுறை என்பதாலும் இது பல நன்மைகளை கொண்டிருப்பதாலும் இது உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சர்வதேச யோகா தினம் 2018 ம் ஆண்டின் போது, உங்கள் முகத்தின் தசைகள் புத்துயிர் பெற உதவும் பயிற்சிகள் அறிந்துக் கொள்ளுங்கள். ஃபேஸியல் யோகா பயிற்சி உங்கள் முக தசைகள் பலப்படுத்த ஒரு வழிமுறையாக பல நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

facial yoga


ஃபேஸியல் யோகா என்றால் என்ன?

“வயதாகிவிட்டது” என்பது அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு வார்த்தை இந்த உலகில் வயதானதை குறைக்க கெமிக்கல்கள் நிறைந்த கிரீம்கள் மற்றும் சீரம்கள் எண்ணற்றவை நிறைந்துள்ளது.ஆனால் யோகாவை அத்துடன் சேர்ப்பதால் எளிதான முறையில் இயற்கையான அழகை பெற உதவுகிறது. The skin & hair clinic டாக்டர் தீபலி பரத்வாஜை பொறுத்தவரை ஃபேஸியல் யோகா என்பது யோகாவின் ஒரு வடிவம்,இது முகத் தசைகளை பயன்படுத்தி செய்யக் கூடியது. இது உங்கள் முகத் தசைகளை அழகாகவும்,புத்துணர்ச்சியுடனும்,சுருக்கம் அற்று இளமையாக காட்சியளிக்கவும் தேவையான ஆக்ஸிஜனைத் தருகிறது.

ஃபேஸியல் யோகாவின் நன்மைகள்

ஃபேஸியல் யோகா உங்கள் முகம் ரீலாக்ஸ் செய்யவும், தசைகளை அழகாக்கவும் செய்யப்படும் பயிற்சிகளின் தொகுப்பு. நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில ஃபேஸியல் யோகாவினால் கிடைக்கும் நன்மைகள்.

1. வயதான தோற்றத்தின் செயல்முறை மெதுவாக்க உதவுகிறது


வயதாக தொடங்கிவிட்டதால், உங்கள் முகத்தில் வரும் கோடுகளையும் , சுருக்கங்களையும் வயதானத் தோற்றத்தைஅளிக்கிறது.  face stretching மற்றும் பிற பயிற்சிகளில் மூலம் இவற்றிலிருந்து உங்களை பாதுகாப்பதுடன் உங்கள் முகத்தை பொலிவுடன் வைக்கிறது.

2. இது பதற்றத்தை விடுவிக்க உதவுகிறது


யோகா உங்களை அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நமது விரக்தியான வாழ்க்கை 8 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு செய்வதால், முதுகெலும்பு, கழுத்து மற்றும் கோர் தசைகள் ஆகியவற்றில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. ஃபேஸியல் யோகாவினால் இந்த இடத்தில் ஏற்படும் அழுத்தங்கள் குறைவதோடு ரீலாக்ஸாக்க உதவுகிறது.

3. டபுள் சின் அகற்ற உதவும்


உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து டபுள் சின் இருப்பதால் முகத்தை வெறுப்பவரா நீங்கள் ஃபேஸியல் யோகா உங்களுக்கான சரியான தீர்வு. ஃபேஸ் யோகாவில் இருக்கும் கழுத்துக்கான யோகாவின் முழம் உங்கள் சின்னில் இருக்கும் பிடிவாதமான கொழுப்பை அகற்ற உதவும்

4. இவை அனைத்தும் இயற்கையே


நீங்கள் அழகான தோல்களையும், சிறந்த முகத் தசைகளையும் ஃபேஸ் யோகாவால் எளிதாக பெற முடியும். எனவே, நீங்கள் உண்மையில் எந்த வயதான அறுவை சிகிச்சையோ மற்றும் பிற இரசானங்களோ பயன்படுத்த வேணடாம்.
facial yoga

சில ஃபேஸியல் யோகா பயிற்சிகள்


1. மீன் முகம்(The fish face)


இந்த மீன் முகம் உங்கள் கன்னதசை இறுக்கத்தில் உதவுவதோடு, முகத்தை அழகாக்குவதோடு சோர்வையும் நீக்குகிறது.நீங்கள் செய்ய வேண்டியது உதடுகளை விரித்து சிரித்து உங்கள் கன்னத்தை உள்ளே இழுக்க வேண்டும்.

மேற்கூரையை முத்தமிடுங்கள் (Kiss the celing)


மேலே பார்த்து முத்தமிடுவதுப் போல் உங்கள் உதட்டை குவியுங்கள் . 5 விநாடிகள் அதேப் போலிருங்கள் இதை மீண்டும் செய்யுங்க்கள். இதன் மூலம் நீங்கள் அழகான தாடை, உயர் கன்ன எழும்புகள் மற்றும் உங்கள் கழுத்து தசைகளை வலுவாக்குகிறது.

சீக்ஸ் (Puffer cheeks)


வாய்வழியாக சுவாசித்து காற்றை வாயில் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு காற்றை இரு கன்னத்திற்கும் மாற்றுங்கள்.இது உங்கள் கன்னத்து தசைகளை வலுவாக்குவதுடன் கன்னம் மெலிந்து போவதில் இருந்தும் தடுக்கிறது.

4. கண் சுருக்கத்திற்கு விடைக் கொடுங்கள்


கண்களின் சுருக்கம் என்பது கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் வயதானதால் ஏற்படும் கோடுகள்.ஆச்சிரியத்தால் கண்களை விரிப்பதுப்போல கண்களை விரித்துக் கொண்டு கைகளால் கண்களுக்கு அருகிலிருக்கும் சதையை பின் இழுக்கவும்.

 5. பேபி பர்ட் (Baby Bird)


உங்கள் கன்னம் மற்றும் கழுத்தை சோர்வடைவதிலிருந்து பாதுகாக்க உங்கள் நாக்கை வாயின் மேல் அன்னத்தை தொடுவதுப் போல அழுத்தி மேலே பார்த்து சிரிக்க வேண்டும்.

 ஆகையால் இந்த சர்வதேச யோகா தினத்தன்று, உங்கள் முகத்தின் அடிக்கடி புறக்கணிக்கப்பட்ட, சோர்ந்த தசைகள் புத்துயிர் பெற சில நேரம் ஒதுக்க வேண்டுமென உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.


Post a comment

0 Comments