கற்றாழையின் 8 பக்க விளைவுகள்: எதுவுமே அளவிற்கு மிஞ்சினால் நஞ்சு என்பது இதனால் தான்.side effects of aloe vera

பலருக்கும் தோல் அலெர்ஜி, கண்கள் சிவத்தல், தோல் தடித்தல் மற்றும் எரிச்சல் போன்ற உணர்வு ஆகியவற்றை உண்டாக்கும் கற்றாழை ஜெல் மீது ஒவ்வாமை உண்டு.

கற்றாழை எனும் மூலப்பொருளுக்கு அறிமுகவே தேவையில்லை. அழகு மற்றும் சுகாதார துறையில், கற்றாழையில் உள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களால் அது ஒரு பெரும் வரம். பச்சை நிற அடர்த்தியான தாவரம் அதனுடைய இலைகளில் நீரைத் தேக்கி, அதை தடித்த மற்றும் ஃப்ளெஷியான பொருள் ஆக்குகிறது. இது கற்றாழை ஜெல் எனவும் அழைக்கப்படுகிறது. நீங்கள் அதன் இலைகளை அறுக்கின்ற போது தோல் மற்றும் முடிகளுக்கு ஆரோக்கியமான ஜெல் கிடைக்கும். இந்த ஜெல்லை குறிப்பிட்ட இடத்தில் உபயோகிப்பதோடு மட்டுமில்லாமல், தொடர்சியாக உட்கொண்டால் அதிகபட்ச பலன்களை அனுபவிக்கலாம். இதில் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், பழமொழியாக கூறுவதைப் போல அளவிற்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சு தான். கற்றாழை உங்களுடைய உடல், தோல் மற்றும் முடிக்கு ஒத்துப்போகாமல் மேற்கொண்டு பக்க விளைவுகள் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

கற்றாழையின் பக்க விளைவுகள்:

கற்றாழையில் எதிர்பாராத நன்மைகள் இருந்தாலும், அதில் உள்ள சில பக்க விளைவுகள் உங்களுடைய ஒட்டுமொத்த சுகாதாரத்தையும் பாதிக்கக்கூடும். இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கற்றாழையின் சில பக்க விளைவுகள்.

கற்றாழையில் செடியின் தோலிற்கு கீழ் இருந்து வரும் லேடெக்ஸ் எனும் மரப்பால் உள்ளது. பலரும் எரிச்சல், வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் குறைந்த பொட்டாசியம் அளவு போன்ற வயிற்றுச் சிக்கல்களை உருவாக்கும் லேடெக்ஸிடம் ஒவ்வாமை கொண்டிருப்பர். அளவோடு உபயோகித்தால் லேடெக்ஸ் பாதுகாப்பானது, எனினும் இதைப்பற்றி அதிக ஆய்வுகள் தேவைப்படுகிறது.

பலருக்கும் தோல் அலெர்ஜி, கண்கள் சிவத்தல், தோல் தடித்தல் மற்றும் எரிச்சல் போன்ற உணர்வு ஆகியவற்றை உண்டாக்கும் கற்றாழை ஜெல் மீது ஒவ்வாமை உண்டு.

கற்றாழை சாறு நுகர்வது உங்களுடைய இரத்த சர்க்கரை அளவு குறைக்கக்கூடும். இதில் உள்ள மற்ற விளைவுகள் நீரழிவு நோய்க்கான சாத்தியங்களை அதிகப்படுத்த வாய்ப்பிருக்கிறது. நீங்கள் ஒரு நீரழிவு நோயாளியாக இருந்தால், கற்றாழை சாறு பருகும் முன்னர் மருத்துவரை ஆலோசிப்பது உகந்தது.

கற்றாழையின் லேக்ஸேட்டிவ் விளைவுகள் உடலில் நீர் வறட்சியை ஏற்படுத்தும். லேக்ஸேட்டிவ்ஸ் பொதுவாக மலச்சிக்கலை தணிக்க பயன்படுத்தப்படும். எனினும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை விட அதிகம் உட்கொண்டால், அது உடலில் நீர் வறட்சிக்கு வழிவகுக்கும்.

கற்பினி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் கற்றாழையில் உள்ள எரிச்சலூட்டும் குணங்களால் அதை குடிப்பதை தவிர்க்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இது கர்ப்பிணி பெண்களின் கருப்பை சுருக்கங்களை அதிகரித்து, பிரசவ சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

side effects of aloe vera


கற்றாழை உடலில் உள்ள போட்டாசியம் அளவை குறைத்து, மேலும் சீரற்ற இதயத் துடிப்பு, பலவீனம் மற்றும் சோர்வை ஏற்படுத்துகிறது. முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்கள் பொதுவாக அதை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கற்றாழையில் உயிரியக்க சேர்மங்கள் கல்லீரலின் நச்சித்தன்மை நீக்கும் செயலில் குறுக்கிட்டு மேலும் சுகாதார சிக்கல்களை உருவாக்கலாம்.

கற்றாழை சாறு குடிப்பதில் பொதுவான அசௌகரியம் வயிற்றுப் பிரச்சனைகள் தான். அதில் உள்ள லேடெக்ஸ் வயிற்றில் அதிகமான பிடிப்புகள் மற்றும் வலிகளை உண்டாக்கக்கூடும். நீங்கள் குறிப்பாக வயிற்றுப் பிரச்சனைகள் உள்ளவறென்றால் கற்றாழை சாறு பருகாதீர்கள்.இதில் உள்ள நன்மைகளை பார்க்கலாம்:

கற்றாழையில் உள்ள சுகாதார நன்மைகள்:

கற்றாழையில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்புகள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்ஸால் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. மேலும் இதன் ஜெல்லில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மூட்டு வீக்கம் மற்றும் வாத நோயை குறைக்க உதவிகரமாக இருக்கிறது.

கற்றாழை சாறு சிறந்த செரிமான உணவென கூறப்படுகிறது. ஒரு கப் நிறைய கற்றாழை சாறு மலச்சிக்கல் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனைகளை நீக்க உதவும்.

கற்றாழை, உயிரணுக்களை நைட்ரிக் ஆக்சைடு மற்றும் சைட்டோகீன்களை உற்பத்தி செய்ய வைத்து, உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது.

aloe vera benefits


கற்றாழை உங்கள் டயட்டின் வளர்ச்சியை மேம்படுத்தி, உங்கள் எடை குறைப்பு சாத்தியத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

கற்றாழை ரத்தச் சோகை உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் ஆயுர்வேத தயாரிப்புகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது உடலில் உள்ள சிவப்பு இரத்த அனுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உங்களுடைய ஹீமோகுளோபின் அளவை சரியான நிலையில் வைத்திருக்கிறது.
aloe vera
 
கற்றாழையின் தோல் மற்றும் முடி நன்மைகள்:

கற்றாழை ஜெல்லில் வைட்டமின் ஏ, பீடா- கேரோடீன் மற்றும் வைட்டமின் ஈ உள்ளிட்ட ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்திருக்கிறது, இவை அனைத்தும் உங்களுடைய தோல் முதிர்ச்சியடைவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளை தடுத்து உங்கள் தோலை பாதுகாக்கிறது.

தோல் மீது கற்றாழை ஜெல் உபயோகிப்பது, தோலிற்கு ஒரு பாதுகாப்பு அடுக்கு போன்று செயல்படுகிறது. மேலும், எரிந்த தோல் மீது குளிர்ச்சியான கற்றாழை ஜெல் தேய்ப்பது உடனடி குளிர்ச்சியை அளித்து, மேலும் உங்கள் தோலை குணப்படுத்துகிறது.

கற்றாழையில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்புகள் பூச்சி கடிகள் மற்றும் தோலின் மீதுள்ள தடிப்புகள் உள்ளிட்டவற்றை குணப்படுத்த உதவுகிறது. சிறிய காயத்திற்கு கூட கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். பலரும் கற்றாழையை சவரம் செய்த பிறகு தோலை ஃப்ரஷாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உபயோகிக்கும் லோஷனாக பயன்படுத்தி வருகின்றனர்.

கற்றாழை ஒரு இயற்கையான ஹேர் கண்டிஷனராக செயல்படுகிறது: அதில் உள்ள ப்ரோடியோலிடிக் என்சைம்ஸ் முடியை வேரிலிருந்து வலுப்படுத்தி மென்மையாகவும் மற்றும் பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

நம்முடைய உச்சந்தலையில் இருக்க வேண்டிய பிஹச் அளவு 5.5, இந்த அளவு பாதிக்கப்படுகிற போது பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு வித்திடுகிறது. ஷாம்பூவில் உள்ள சில பொருட்கள் உங்கள் உச்சந்தலையில் உள்ள பிஹச் அளவை மாற்றியமைக்கக்கூடும். கற்றாழை உங்கள் உச்சந்தலையில் ஈரப்பதம் மற்றும் பிஹெச் சமநிலையை மீண்டும் நிலைநிறுத்துகிறது, இது மேலும் முடிக்கு மென்மையான தோற்றத்தை தருகிறது.

உங்களுடைய உச்சந்தலை உலர்ந்து மற்றும் சீரற்று இருக்கிறதென்றால், கற்றாழை தான் உங்களுடைய ஒரே தீர்வு. இதில் உள்ள ஈரப்பத தன்மைகள் துளைகளை கலைந்து, இறந்த தோல் செல்களை நீக்கி உச்சந்தலையில் ஈரப்பதம் நுழைய வழி செய்கிறது. ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் குறைவான தலை பொடுகு அல்லது உலர் உச்சந்தலையில் சிக்கல்களை இருப்பதை உறுதி செய்யும்.

COMMENTSகுறிப்பிட்ட அளவில் கற்றாழை சாறு பருகுவது சரியென்றாலும், இதனுடைய பக்கவிளைவுகள் உங்களுடைய உடலை பாதிக்காமல் இருக்க ஒரு மருத்துவரை கலந்து ஆலோசிப்பது சிறந்தது.

Post a comment

0 Comments