உடல் எடை குறைக்க பயன்படும் 5 புரோடீன் நிறைந்த காலை நேர உணவு வகைகள்

உடல் எடை குறைக்க பயன்படும் 5 புரோடீன் நிறைந்த காலை நேர உணவு வகைகள்

அன்றாடம் மனித செயல்பாட்டிற்கு காலை உணவு அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர், இது உடலில் மெடபாலிஸத்தை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதோ நீங்கள் காலை உணவாக பயன்படுத்தக்கூடிய ஐந்து புரோடீன் நிறைந்த உணவுகள்

நீங்கள் உடல் எடை குறைப்பைப் பற்றி பேசுகின்ற போது அதில் புரோடீன் பங்கை தவிர்த்துவிட முடியாது. புரோடீன் என்பது உடலில் உள்ள ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நீண்ட தொடர் அமினோ அமில் எச்சங்கள் அடங்கிய மிகப்பெரிய உயிரி கூறுகள் ஆகும். உடல் எடை குறைப்பை பொருத்தவரை, புரோடீன் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறது. இது பசியின்மையை குறைக்கும் ஹார்மோன்களான ஜீஎல்பி-1, பிஒய்ஒய் மற்றும் சிசிகே ஆகியவற்றை அதிகரித்து, பசியை வரவழைக்கும் ஹார்மோன்களான க்ரெலின் உள்ளிட்டவற்றை குறைத்து, உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது. சந்தைகளில் நிறைய அளவில் புரோடீன் நிறைந்த உணவுகள் கிடைத்தாலும், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி நிபுணர்கள் அதை அன்றாட உணவுகளிலே அதிகம் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.
இந்தியாவில் புரதம் நிறைந்த தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் மாவு ஆகியவை நிறைய கிடைக்கின்றன. உங்களுடைய காலை உணவுகளுக்கு பல வழிகளிலும் ஆரோக்கியமான தொடக்கம் தர முடியும். அன்றாடம் செயல்பாட்டிற்கு  காலை உணவு அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர், இது உடலில் மெடபாலிஸத்தை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

இதோ நீங்கள் காலை உணவாக பயன்படுத்தக்கூடிய ஐந்து புரோடீன் நிறைந்த உணவுகள்

1. முட்டை பரோட்டா

முட்டைகள் தான் இயற்கையாக கிடைக்கிற புரோடீன் நிறைந்த சிறந்த உணவாகும். முட்டையுடன் காலை உணவு அதிக அளவு திருப்தியை அளித்து, மதியம் வரை மீண்டும் உண்பதற்கான தேவையை குறைக்கிறது. முட்டை பரோட்டா செய்கிற போது, தரம் குறைந்த எண்ணெய்யில் பரோட்டாவை தயார் செய்யாதீர்கள். தரமான எண்ணெய்யை தேர்வு செய்து, உடல் எடை குறைப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் தடைபடுவதில்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

udal edai kuraikkum unavugal
2. தாலியா (ஒருவகை கோதுமை உணவு)


தாலியாவில் புரோடீன் நிறைந்துள்ளது. மேலும் அதில் உடல் எடை குறைப்பிற்கு உதவும் சத்துக்கள் நிறைந்து க்ளைகெமிக் இண்டெக்ஸ் குறைந்த அளவில் இருக்கிறது. தாலியாவை பாலில் சேர்க்கலாம் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து உணவாகவும் உட்கொள்ளலாம்.


3. சோயா ஊத்தாப்பம்.


குறைவான கொழுப்பு மற்றும் அதிக புரோடீன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சுவையான ஊத்தாப்பங்கள் உங்களுடைய நாளின் தொடக்கத்தில் உங்களுக்குத் தேவையான சரியான உந்துதலை தருகிறது. இதற்கான சமையல் குறிப்பும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது (embed link from original story here)


4. பேசன் சில்லா


பேசன் (கடலை மாவு என்பது சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய ஆரோக்கியமான மாவு மற்றும் இதில் அதிக அளவிலான புரோடீன் இருக்கிறது. இதற்கான சமையல் குறிப்பும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

udal edai kuraikkum unavugal

5. ஓட்ஸ் இட்லி:

மனித குலம் அறிந்த ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று இட்லி. புளித்த அரிசி அல்லது மாவிலிருந்து தயாரிக்கப்படும் இட்லி குடலிற்கு ஏற்ற உணவு. ஆரோக்கியமான குடல் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது. ஆரோக்கியமான செரிமானம் ஆரோக்கியமான உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது. இதில் நீங்கள் ஓட்ஸ் பயன்படுத்தி அன்றாட உணவிற்கு ஆரோக்கியமான ஒரு தொடக்கத்தை தரலாம். இதற்கான சமையல் குறிப்பும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (embed link from original story here) 

Post a comment

0 Comments