சீரக தண்ணீரின் 15 அதிசய குணங்கள்

“தினமும் காலையில் எழுந்தவுடன்,  சீரக தண்ணீர் குடிக்க வேண்டும்” என்று பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர், மருத்துவர் அஞ்சு சூத்.

ஆரோக்கியமான உடல்நலத்துடன் வாழ வேண்டுமா? “தினமும் காலையில் எழுந்தவுடன்,  சீரக தண்ணீர் குடிக்க வேண்டும்” என்று பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர், மருத்துவர் அஞ்சு சூத். சிறிதளவு சீரகத்தை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.  பின், வெது வெதுப்பானவுடன் குடிக்க வேண்டும் பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் இயற்கை மருந்தாக சீரகம் உள்ளது. ”ஆரோக்கியமான உடல்நலத்திற்கு கண்டிப்பாக தினமும் சீரக தண்ணீர் குடிக்க வேண்டும்” என்றார் மருத்துவர்.


சீரக தண்ணீரின் 15  இயற்கை  வீட்டு வைத்திய குறிப்புக்கள்:

 வயிற்றுக்கு நல்லது“அமிலத்தன்மை, குமட்டல், அஜீரண கோளாறுகள் ஆகிய பாதிப்புகளில் இருந்து நீங்க, சீரக தண்ணீர் உதவும். அதுமட்டுமின்றி சீரக தண்ணீர் வலி நிவாரணியாகவும் செயல்படும். குறிப்பாக வயிற்று வலி போக்கும்” என மருத்துவர், அசுதோஷ் கவுதம் கூறுகிறார்.

கருத்தரிப்பின் போது சீரான செரிமானம்

"கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு ஆகியவற்றை செரிமானம் செய்ய சீரக தண்ணீர் பயன்படுகிறது. கருத்தரிப்பின் போது சீரான செரிமானம் பெற சீரக தண்ணீர் குடித்து வந்தால் நல்லது” என மருத்துவர் சூத் தெரிவித்தார்.

கருத்தரிப்பின் போது பால் சுரக்க உதவும்

“பால் சுரப்பிகளில் இருந்து, பால் சுரக்க சீரக தண்ணீர் பயன்படுகின்றன. எனவே, இதன் மூலம் கருத்தரிப்பின் போது, பெண்களுக்கு பால் சுரக்க உதவுகின்றது” என்றார் மருத்துவர் அஞ்சு

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல்

“சீரக தண்ணீரில் அதிக அளவு இரும்பு மற்றும் நார் சத்துகள் உள்ளன. சீரக தண்ணீர் குடிப்பதனால், நோய் எதிர்ப்பு சக்தி கூடி, கிருமிகளிடம் இருந்து உடலை பாதுகாக்கும்” என மருத்துவர் மனோஜ், ப்போர்டிஸ் மருத்துவமனை கூறினார்.

நீரிழிவு நோய் சிகிச்சை

“நீரிழிவு நோய் உள்ளவர்கள், வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்” என்றார் மருத்துவர், அசுதோஷ் கவுதம்

சுவாச அமைப்பு

“சீரான சுவாச அமைப்பு பெறுவதற்கு சீரக தண்ணீர் உதவும். இருதயத்தில் தங்கிருக்கும் சளியை அகற்றஉதவும்” என்றார், மருத்துவர் மனோஜ் கே. அஹுஜா

சீரான இரத்த அழுத்தம்

“பொட்டாசியம் அதிக அளவு சீரக தண்ணீரில் அதிகம் இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும் சீரான செயல்பாட்டிற்கும் பொட்டாசியம் மிக முக்கியமானது,அதுமட்டுமின்றி, இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும்” என்றார் மருத்துவர் மனோஜ், கே.அஹூஜா

ஆற்றல்

“சோர்வான மனநிலையில் இருந்தால், தொடர்ந்து சீரக தண்ணீர் குடித்து வரவும்.இதனால், உடல் ஆற்றல் மேம்படும். ஆரோக்கியமாக உணர உதவும்.” என்றார் மருத்துவர் அஞ்சு

seeraga thaneer


கல்லீரல்

“நச்சு தண்மைகளை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். எனவே, கல்லீரல் செயற்பாட்டிற்கு சீரக தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும்” என்று மருத்துவர் அசுதோஷ் கவுதம் கூறினார்.

இரத்த சோகைக்கான சிகிச்சை

“உடல் ஆரோக்கியத்திற்கு இரும்பு சத்து மிகவும் முக்கியமானது, சீர்கத்தில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகை பிரச்சனையை போக்க உதவும். இரும்புச்சத்து குறைபாடுகள் குணமடையவும் சீரக தண்ணீர் குடிக்கலாம்” என்று மருத்துவர் அஹூஜா கூறினார்.

மாதவிடாய் வலி குறையும்

“மாதவிடாயின் போது ஏற்படும் வலிக்கு, சீரக தண்ணீர் சரியான மருந்தாக அமையும்” என்று மருத்துவர் அசுதோஷ் கவுதம் கூறினார். மேலும், மாதவிடாய் நேரத்தில் ஏற்படும், தசை பிடிப்புகளிலிருந்து விடுபெற சீரக தண்ணீர் உதவும்

சருமம் மற்றும் தோள்

“ஆரோக்கியமான சருமம் பெற, சீரக தண்ணீர் உதவுகிறது. சீர்கத்தில் பொட்டாசியம், கால்சியம்,செலினியம், காப்பர் மற்றும் மென்கனீஸ் சத்து உள்ளன. இவை பளிச்சிடும் சருமத்திற்கு உதவும் சத்துக்கள். முகம் பேக்குடன், மஞ்சள் மற்றும் சீரக தண்ணீர் சேர்த்து உபயோகித்தால், நல்லது.” என்று மருத்துவர் சப்னா கூறினார்.


சுருக்கம்

“சீரகத்தில் இருக்கும் வைட்டமின் இ, முகத்தில் வரும் சுருக்கங்கள் வராமல் இருக்கவும், வேகமாக வயதான தோற்றம் ஏற்படுவதை தடுத்துக்கும்” என்றார் மருத்துவர் சப்னா

முகப்பரு

“முகத்தில் ஏற்படும் முகப்பரு மறைய, சீரக தண்ணீர் பெரிதும் உதவியாக இருக்கும். பாக்டீரியா எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதனால், முகத்திற்கு தேய்த்து வந்தால் முகம் பளிச்சிடும்” என்றார், மருத்துவர் ரோஷினி

முடி வளர்ச்சி

“சீர்க தண்ணீரில் இருக்கும் பல சத்துகள்,முடி வளர்ச்சிக்கும்,முடி நுனியில் இருக்கும் வேர்களுக்கும் ஆரோக்கியம் அளிக்க கூடியவை.” என மருத்துவர் ரோஷினி கூறினார்.

Post a comment

0 Comments