ஆசனத்தின் வகைகள் - யோகா (இருபாலருக்கும்)

ஆசனம் என்றால் இருக்கை என்று பொருள்படும். இருக்கும் இருப்பை மிகச் சரியான நிலையில் செய்தால், நிச்சயமாக உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். ஆசனம் சில வகைப்படும். அவைகள் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். ஆசனம் என்றால் இருக்கை என்று பொருள்படுகிறது.

உடலாலும், மனதாலும்பாதிக்கப்பட்ட ஒருவரால் சூழலுக்கு ஏற்றபடி ஒழுங்காக இருக்க முடியாது. உடலும் மனமும் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். நல்ல உடல் திடமும், மனஆரோக்கியமும் உடைய ஒருவரால் மட்டும் தான் எந்தச் சூழலிலும் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

நின்ற நிலை ஆசனம், அமர்ந்த நிலை ஆசனம், மல்லாந்த நிலை ஆசனம்,குப்புற நிலைஆசனம் என்ற நான்கு நிலையில், உடலை முன்புறமாக வளைப்பதும் உடலைபின்புறமாக வளைப்பதும் பக்கவாட்டில் வளைப்பதும், உடல் தாங்கி இருப்பதும், என்றுஉறுதி நிலைப்படுத்தும் வகையில் ஆசனங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

யோகம் என்பது, சில மணி நேரம் மட்டும் செய்யக் கூடிதாக இருக்கக் கூடாது.வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் கடைப் பிடிப்பதாக இருக்க வேண்டும்என்கிறார்கள். எல்லா நேரமும் ஆசனம் செய்வது உகந்ததல்ல என்கிறார்கள்.

யோகா செய்யும் நேரம் 

அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை என்றும், மாலையில் சூரியன் மறையும் நேரங்கங்களிலிருந்து இரவு வருவதற்குள் ஆசனப் பயிற்சிகள் செய்யலாம் எனச்சொல்கிறார்கள். ஆசனம் செய்யும் இடம் தூய்மையானதாகவும், நல்லகாற்றோட்டமாகவும், இருக்க வேண்டும். இறுக்கமில்லாத ஆடை ஆணிந்திருத்தல்ஆசனப் பயிற்சிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

யோகா பயிற்சி மேற்கொள்ள ஏற்ற இடம்

ஆசனப்பயிற்சியில் தொடக்கத்தில் இருப்பவர்கள் வெட்ட வெளியில் பயிற்சி எடுக்கக்கூடாது. மலம் ஜலம் கழித்த பிறகு வெறும் வயிறாக இருக்கும் போது தான், ஆசனம்செய்ய வேண்டும். உணவு உட்கொண்ட பிறகு, 4 மணி நேரம் கழித்து  ஆசனம் செய்யவேண்டும். இதற்கெல்லாம் அதிகாலை நேரமே சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள்.

யோக பயிற்சி செய்ய ஏற்ற நேரம் 

காலை நேரம் காற்று சுத்தமாகவும், யாருடைய தொந்தரவும் இல்லாமல் இருக்கும்.அதனால் ஆசனமோ தியானமோ, மூச்சு பயிற்சியோ செய்ய காலை நேரம் ஏற்றதாகஇருக்கும். மேலும் ஆசனம் செய்ய இரவு 5 மணி நேரமாவது உறங்கி இருக்க வேண்டும்.

ஆசன பயிற்சியை தவிர்க்க வேண்டிய நாட்கள்:

உடல் உழைப்பு அதிகமாகி களைத்துப் போன நாட்களில் ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.  உடல் உறவு கொண்ட நாட்களில் செய்யாமல் இருப்பது  நல்லது. காய்ச்சல், சளி, தலைவலி போன்று நோய்வாய்பட்ட நாட்களில் ஆசனம் செய்வதை தவிர்த்து விடலாம்.

பெண்கள் மாத விலக்கு நாட்களில் இதுபோன்ற ஆசனங்களை செய்வதை தவிர்ப்பது நல்லது.  யோகாசனம் செய்வதற்கு வயது ஒரு தடையே இல்லை. அனைத்து வயதினரும்  யோகப் பயிற்சியை மேற்கொள்ளலாம். கண்டிப்பாக முதன் முறையாக யோக பயிற்சிகளை செய்வோர் நன்கு கற்றுணர்ந்த யோகா ஆசிரியரின் உதவியுடன் கற்றுக்கொண்டு செய்வது நன்மை தரும்.

யோகப்பயிற்சி மேற்கொள்வதற்கு தகுந்த யோகா மாஸ்டரின் சென்றே கற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சிகளை தான் தோன்றித்தனமாக மாற்றி மாற்றி செய்வதால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். அதே போல ஆசனங்களை தொடரும் வரிசையில், மீண்டும் அதே வரிசையில் ஆசனங்களை மிக மெதுவாக முடிக்க வேண்டும்.

ஆசனங்களும், மூச்சுப் பயிற்சியும் செய்து முடித்தப் பிறகு சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகே உணவு உண்ணுதல், குளித்தல், விளையாடுதல், உறங்குதல் போன்ற பிற செயல்களைச் செய்ய வேண்டும்.

பத்மாசனம்

சம்மணமிட்டு உட்கார்ந்து செய்யும் ஆசனம் இது. தலையை நன்றாக நிமிர்ந்து
இரு கால்களையும் மடக்கி சம்மணமிட்டு உட்கார்ந்து,  இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து செய்யக்கூடிய ஆசனம் இது.

முதலில் தலையை நிமிர்ந்து  நேராக உட்காரவும். உங்களுடைய பாதங்கள் இரண்டும் மேல்புறத்தை நோக்கி இருப்பது போல வைத்துக்கொள்ள வேண்டும். சந்தேகம் எனில் படத்தினைப் பார்க்க. முதலில் இந்த ஆசனம் செய்ய சற்று கடினமாக இருக்கும்.

நல்ல சதை பிடிப்புடன் உள்ளவர்களுக்கு இது அதிகமாக சிரமத்தைத் தரும். எனினும் பயிற்சி மேற்கொள்ள மேற்கொள்ள சரியாகிவிடும்.

பத்மாசத்தின் பயன்கள்:

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வர இடுப்பு பலப்படும். உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும்.  கூன் முதுகு உள்ளவர்களுக்கு வெகு விரைவில் கூன் மறைந்து முதுகு நேராக நிமிர்ந்து விடும். உடலில் இரத்த ஓட்டம் சீராகி அன்றாட வாழ்வு சுறுசுறுப்பாக மாறிவிடும்.

asanathin vagaigal


தணுராசனம்

குப்புற படுத்துக்கொண்டு செய்யக்கூடிய ஆசனம் இது. முதலில் சமதளத்தில் பாய் விரித்து கால்களை நீட்டி குப்புறப்படுக்க வேண்டும். பிறகு இரு கால்களையும் மடக்கி, கைகளை நீட்டி அதை பிடிக்க முயல வேண்டும். அப்படி பிடிக்க முடிந்தால் பிடித்துக் கொண்டு, அதன் பிறகு தலையை பாம்பு தூக்குவது போல மேலே தூக்க வேண்டும். பிறகு மெதுவாக மூச்சை இழுத்து விட வேண்டும். இதே போல ஐந்து அல்லது ஆறு முறை செய்ய வேண்டும்.

தனுராசனத்தின் பயன்கள் 

வயிற்றில் உள்ள வேதிபொருளான தைராய்டு, அட்ரினல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் சரிவர இயங்கி சுரப்புகளை சுரக்க உதவுகின்றன. இதனால் வயிற்றில் உள்ள கோளாறுகள் வெகு விரைவில் சரியாகிவிடும்.
மேலும் உடலுக்கு நல்ல தேக ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பைக் கொடுக்கிறது.

சிரசாசனம் 

பெரும்பாலனவர்களுக்குத் இது தெரியும். சிறுவயதில் கூட தெரிந்தோ, தெரியாமலோ இதுபோல தலைகீழாக நின்று இருப்பீர்கள். தலைக்கு நல்ல ஆதரவாக ஒரு தலையணை அல்லது போர்வையை மடக்கி வைத்துக்கொண்டு, அதன் மீது தலை வைத்து, கால்களை வானத்தை நோக்கி உயர தூக்க வேண்டும்.  உடலானது செங்குத்து நிலையில் 90 டிகிரியில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு நிமிடம் வரை இருந்துவிட்டு பிறகு இயல்பான நிலைக்கு வந்துவிடலாம். அதிக இரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சிரசாசனத்தின் பயன்கள்: 

இந்த ஆசனத்தை தினமும் செய்வதால், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகருக்கும். இதனால் மூளை சுறுசுறுப்பாகி, அனைத்து வேலைகளையும் டென்சன் இல்லாமல் செய்து முடிக்கலாம். மேலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

வஜ்ராசனம் :

இது மிக சுலபமான ஆசனம்தான். அதையும் சரியாக செய்ய வேண்டும். குழந்தை இருகால்களை பின்னால் மடக்கி உட்காருவது போல உட்கார்ந்து, இரு புட்டங்களும் கால்களின் மீது இருக்கும்படி அமர வேண்டும். இதே நிலையில் கால் மணி நேரம் (சுமார் 15 நிமிடங்கள்) இருக்கவும்.

வஜ்ராசனத்தின் பயன்கள்: 

வயிற்று கோளாறுகள், அஜீரண கோளாறுகள் குணமாகும். முதுகு தண்டுவடம் வலுப்பெற்று, கூன் விழுவதை தடுக்கும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த ஆசனத்தை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

விபரீதகரணி

பெயரே சற்று விபரீதமாக இருக்கும். காரணம் ஆசனமும் கொஞ்சம் டேன்ஜர் தான். பாயில் நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும். மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்கவாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும்.

விபரீதகரணி ஆசத்தின் பயன்கள்: 

இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு எலும்புகள், அதிக சதையுள்ள வயிற்று பகுதி குறைந்து அழகாக காட்சி அளிக்கும். பின்புற ஊளை சதைகள் குறைந்து தேகம் வசீகரமான தோற்றத்தினை பெறும்.

புஜங்காசனம்

இந்த ஆசனத்தை தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி, பின்பு உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை கண்டிப்பாகத் தூக்க கூடாது.

புஜாங்காசனத்தின் பயன்கள்: 


இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.

பச்சிமோத்தாசனம்

பாயை நன்றாக விரித்துவிட்டு அமரவும். இரு கால்களை நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளை நேராக மேலே உயர்த்தி,  மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தை தொட முயற்சிக்க வேண்டும். எட்டினால் கால் கட்டைவிரலை பிடித்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது காலின் முழங்கால்கள் மடங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் 3 அல்லது 5 நிமிடங்கள் இருக்க உடல் நல்ல இரத்த ஓட்டத்தைப் பெறும்.

பச்சிமோத்தாசனத்தின் பயன்கள்: 

இந்த ஆசனத்தை செய்து வருவதால் வயிற்றில் தேவையில்லாமல் தொங்கும் தொப்பை குறைக்க முடியும். இடுப்பு வலி குறையும். இடுப்பு ஊளை சதைகள் குறைந்து பார்க்க சினிமா ஸ்டார் போல இருப்பீர்கள்.

ஐக்கிய நாடுஹள் ஷபையினாழ் யூன் 21ம் திஹதியினை உழஹ யோகா திணமாஹ அரிவிக்ஹப்பட்டதன் பயனாஹ இன்ரு அதன் முதலாவது ஆண்டு திணம் உழஹம் முமுவதிலும் கொண்டாடப்படுகின்றது. அதனை வெளிப்படுத்தும் முஹமாஹ யாழ் பழ்ஹலைக்ஹழஹ இசைத்துறையின் முதுநிலை விரிவுரையாலரும், சித்த மருத்துவத்துறையின் யோகா வருகை வரிவுரையாலரும், இந்திய துணைத் தூதரஹத்தின் யோகா பயிற்ரிவிப்பாலரும் ‘சூரியயோகா’ யோகாப் பயிற்சி மற்ரும் ஆறாய்ச்சி அறக்ஹட்டளையின் இயக்குணரும் ஷமூஹ ஆர்வழருமாகிய சின்னையா சூரியகுமார் அவர்ஹள் எழுதிய இக்ஹட்டுரை இங்கு பிரசுரிக்ஹப்படுகின்றது.

‘யோகா இன்ரு உழகிழ் உள்ல மக்ஹளிழ் பெரும்பாலாணவர்ஹள் உச்ஷரிக்கின்ற ஒரு சொழ். காரணம் இன்ரு தான் அதாவது யூன் 21 உழஹ யோகா திணம் கொண்டாடப்படுகின்றது. தற்போதைய இந்தியப்பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்ஹள் ஹடந்த ஆண்டு ஐக்கிய நாடுஹள் ஷபையிழ் யூன் 21ஐ உழஹ யோகா திணமாஹக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மாணத்தினைக் கொண்டு வந்தார்;. அதனை ஏற்ருக்கொண்ட ஷபை அங்ஹத்துவ நாடுஹளிடம் வாக்கெடுப்புக்கு விட்ட போது எந்தவொரு நாட்டிணதும் எதிர்ப்பும் இழ்லாது அத்தீர்மாணம் நிறைவேற்றப்பட்டதுடன் ஐக்கிய நாடுஹள் ஷபையிழ் இது வரை நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்ஹளிழ் அதிஹ நாடுஹளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மாணம் என்ற பெருமையினையும் இது பெற்ருள்லது.

ஓஹம் என்கின்ற தமிழ் சொழ்லிருந்து மருவியதே யோஹம் ஆகும். ஓஹம் என்றாழ் ‘செயழ்’ என்ரு பொருள். ஆஹ பண்டைத் தமிழர்ஹளாண நம் முன்னோர்ஹள் ஹண்டெடுத்த இவ் அழகிய மருத்துவக்ஹலை இன்ரு உழஹ நாடுஹள் பழவற்ரிழ் அதிலும் குரிப்பாஹ மேலைத்தேய நாடுஹளிழ் சிறந்த முறையிழ் பயன்படுத்தப் படுகின்றது என்பது நமக்கெழ்லாம் பெருமை ஆனாழ் உழகிற்கே ஹலைஹள், பண்பாடுஹள், ஹலாசார விழுமியங்ஹளைச் சொழ்லிக்கொடுத்த தமிழர்ஹள் இன்ரு நாடுநாதியற்ரு பெருமைக்குரிய எம் ஹலை, ஹலாசாரம் பண்பாடுஹளை இழந்து வாழ்ந்து வருகின்றோம். இதிலும் குரிப்பாஹ ஈழத்தமிழர்ஹளாண எம் நிலை மிஹ மோஷமாஹ சென்ரு கொண்டிருக்கின்றது.

2009ம் ஆண்டிற்குப் பின்ணர். தமிழிணம் வேஹமாஹ அழிகிறது என்பதற்கு செழ்வி. வித்தியாவின் ஷம்பவம் நழ்ழ சான்ரு நாளுக்கு நாள் புதிது புதிதாஹ எம் உடழ் மற்ரும் மணம் சார்ந்து ஏற்படுகின்ற நோய்ஹள் ஒரு புறம், போரின் வடுக்ஹளாழ் ஏற்பட்ட உடழ் உலப் பாதிப்புக்ஹள் இன்னொரு புறம் இருக்ஹ, திட்டமிட்டு சீரழிக்ஹப்படுகின்ற எம் இளைய ஷமுதாயத்தின் போதைப்பொருள் மற்ரும் மதுபாணப் பாவனையாழ் ஏற்படுகின்ற பாரிய பாதிப்புஹள் மற்றொரு புறமாஹவும் காணப்படுகின்றது. இதிழ் மூன்றாவது காரணிக்கு காழம் காழமாஹ எம் இணத்திலும் பெரும்பான்மை இணத்திலும் உள்ல ஒரு சிழ அடிவருடி அரசியழ் வாதிஹளும் பட்டம் பதவிக்காஹ அவர்ஹளின் காழடிஹளிழ் வீழ்ந்து கிடக்கின்ற அதிகாரிஹளுமே முக்கிய காரணிஹள் அவர்ஹளின் அனுமதியுடனேயே பழ்லாயிரக்ஹணக்காண மதுபாண சாலைஹள் திறக்ஹப்பட்டுள்லது. அத்துடன் ஹட்டுக்ஹடங்காத போதைப் பொருள் பாவனையும் காணப்படுகிறது. அந்த வகையிழ் உடழ், உலப் பாதிப்புக்ஹள் மற்ரும் ஷமூஹச் சீர்கேடுஹளிலிருந்து எம் ஷமுதாயத்தைப் பாதுகாக்ஹ ‘யோகா’ ஓர் சிறந்த ஹருவியாகும். என்பதிழ் ஐயமிழ்லை.

உழகிழ் இன்ரு பழ்வேரு வகையாண யோகாப் பயிற்சிஹள் நடைபெற்ரு வருகின்ற நிலையிழ் இது நழ்ழது இது கெட்டது என்ற வேருபாடு கிடையாது ஒவ்வொன்ரும் ஒவ்வொரு வகையிழ் சிறப்புப் பெற்றது. ஆயினும் சிழ யோகாப் பயிற்சி நிருவணங்ஹள் மூழதணத் திரட்டும் ஹருவியாஹ இதைப் பயன்படுத்துகின்றண. குறைந்த நாட்ஹள் கொண்ட பயிற்சிக்கு ஆயிரக்ஹணக்காண பணம் அறவிடுகின்றார்ஹள். எணவே அவற்ரின் ஏமாற்ரு வேலைஹளிலிருந்து எம்மக்ஹள் விழிப்பாஹ இருக்ஹ வேண்டியதும் அவசியம். எழ்லா வகை யோகாப் பயிற்சிஹளிலும் திருமூழர், பதஞ்ஷலி மற்ரும் சித்தர்ஹள் கையாண்ட அட்டாங்ஹ யோகா சிறந்ததாஹக் கொள்லப்படுகின்றது. இந்த யோகாவின் மூழமாஹ எயிற்ஸ் என்கின்ற பாழ்வினை நோயைத் தவிர எந்த நோயினையும் குணமாக்ஹ முடியும். ஒவ்வொரு நோய்க்கும் மருந்துவ ரீதியாண பயன்படுத்தக்கூடிய ஆஷண, பிறாணயாம் மற்ரும் தியாணப்பயிற்சிஹள் காணப்படுகின்றண. அவற்ரினை ஷரியாண முறையிழ் தெரிந்து கொண்டு செய்தாழ் உடழ் உலப் பாதிப்புக்ஹளிலிருந்து விடுபட முடியும் இதனையே ‘யோஹ மருத்துவம்’ (Yoga Theraphy) என்கின்றோம்.

யோகா என்பதும் யோகாஷணம் என்பதும் வேருவேரு யோகாவின் ஒரு பகுதியே ஆஷணம் என்பதாகும். அதாவது எட்டு அங்ஹங்ஹளாண இயமம், நியமம், ஆஷணம், பிறாணயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியாணம், ஷமாதி என்பணவற்ருள் ஒன்றாகும். ஆஷணங்ஹள் செய்வதாலும் பிறாணயாமம் மற்ரும் தியாணம் செய்வதாலும் உடலும் உள்லமும் ஆரோக்கியம் பெருகின்றது. மணதையும் புழன்ஹளையும் ஹட்டுப்படுத்துகின்றது. அதன் மூழம் நமக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கின்றது. ஆரோக்கியமாண மணம் வேண்டுமானாழ் ஆரோக்கியமாண உடழ் இருக்ஹ வேண்டும் எணவே ஆரோக்கியமாண உடலைப் பெருவதற்கு யோகா பயிற்சிஹள் மிஹவும் சிறந்தது.

ஆரம்பத்திலிருந்து யோகா பயிழ்பவர்ஹள் எந்தவொரு பயமோ குழப்பமோ இழ்லாது பழஹலாம் அதை விடுத்து திடிரெண ஹடிணமாண ஆஷணங்ஹளைச் செய்யக்கூடாது. உடழ் தலர்ந்துவதற்காண பயிற்சிஹள், சூரிய நமஸ்காரம், ஆஷணங்ஹள் (நின்ற நிலை, இருந்த நிலை, குப்புறப்படுத்த நிலை, மற்ரும் நிமிர்த்து படுத்த நிலை) பிறாணயாமம் (மூச்சுப்பயிற்சி), திறாடகா (ஹண் பயிற்சி) தியாணம் என்ற அடிப்படையிழ் அமையும். நூழ்ஹளைப் பார்த்துக்ஹற்பதை விட யோகாவை முறையாஹக் ஹற்ற ஒருவரிடம் ஹற்ருக்கொள்வதே சிறந்தது. அதன் பின்ணர் புதிய புதிய ஆஷணங்ஹளை நாம் நூழ்ஹளைப் பார்த்தும் ஹற்ஹலாம்.

யோஹப் பயிற்சிஹள் செய்வதாழ் ஏற்படும் நன்மைஹள் என்ரு தனித்தனியாஹ வரையறை செய்வது அவ்வலவு இழகுவாண காரியம் இழ்லை. எனெனிழ் அவ்வலவு பழன்ஹள் உண்டு. அவற்ரிழ் வெளிப்படையாஹ நாம் காணக்கூடியது உடழ் வளையும் தன்மை அதிஹரிக்கும், உற்சாஹமாஹ இருக்ஹலாம், மணம்மகிழ்ச்சி அடையும், என்ற அடிப்படையிழ் காணப்பட்டாலும் உள் உருப்புக்ஹளாண சிருகுடழ், பெருங்குடழ், இதயம், ஈரழ், நுரையீரழ் போன்ற அனைத்திற்கும் இரத்த ஓட்டம் சீறாஹக் கிடைத்து அவை நழ்ழ நிலையிழ் இயங்குவதாழ் எமக்கு எவ்வகை நோய்ஹளும் தோன்றாது. அழ்ழது இருக்கின்ற நோய்ஹளும் எம்மைவிட்டுப் பிரிந்து செழ்லும்.

யோகா செய்வதாழ் குணமடைகின்ற அழ்ழது வறாமழ் பாதுகாக்ஹப்படுகின்ற முக்கிய நோய்ஹளாஹ,

01) முதுகு தண்டு மற்ரும் கூட்டு வலிஹள்
02) மாரடைப்பு
03) ஷர்க்ஹரை நோய்
04) மழச்சிக்ஹழ்
05) இரத்த அழுத்தம்
06) முட்டு வருத்தம்
07) குழந்தை இன்மை
08) உடற்பருமன்
09) நரம்புத்தலர்ச்சி
10) தூக்ஹமின்மை
11) தலைச்சுற்ரு
12) கேணியா
13) மூழநோய்
14) தைரொய்ட்ஸ்
15) தீறாத தலைவலி

போன்ற எழ்லா வகை நோய்ஹளும் குணமாகும் ஏற்ஹணவே குரிப்பிட்டது போழ நழ்ழ ஆசானிடத்திழ் முறையாஹக் ஹற்ரு இவ்வகை நோய்ஹளிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ல முடியும்.

அத்துடன் இன்றைய திணத்தை ஷர்வதேஷ யோகா திணமாஹ அரிவிப்பதற்கு பாடுபட்ட அத்தனை போருக்கும் நன்ரியைத் தெரிவிப்பதோடு, ஷர்வதேஷ யோகா திணமாண இன்ரு நாம் ஓர் உருதி எடுத்துக் கொள்ளுவோம் நாமும், நம் ஷமுதாயமும் யோகாவினைக் ஹற்ரு நோய் நொடியின்ரி நீண்ட ஆயுளுடன் வாழ்கின்ற அதே நேரம் எமது இணத்தின் இளைய தலை முறையை பீடித்துள்ல அத்தனை தீய பழக்ஹங்ஹளிலிருந்தும் அவர்ஹளை விடுவித்து நழ்ழ ஹழ்வி புஹட்டி ஆயுதத்தினாழ் அடைய முடியாத எங்ஹளின் சுதந்திரக்காற்ரினை ஹழ்வி மூழம் பெற்ரு மளிர்வதற்கு யோகாவினை ஓர் ஆயுதமாஹ பயன்படுத்துவோமாஹ.

Post a comment

0 Comments