தோல் வியாதிகள் - பராமரிப்பு குறிப்புகள்

தோல் மனிதன் மிகப்பெரிய உறுப்பு. இது மனிதனை வெப்பம், குளிர் போன்றவற்றிலிருந்து காத்திட உதவுகிறது. இதில் இரண்டு மில்லியன் வியர்வைத்துளிகள் உள்ளன. மிகப்பெரிய உறுப்பான இதைத்தான் மனித ஆரோக்கியத்தின் கண்ணாடி என்று குறிப்பிடுவார்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தோல் ஆரோக்கிய கேட்டிற்கு ஆளானால் மிகப்பெரிய ஆபத்து உருவாகிறது என்று பொருள்.

வியர்வையை வெளியேற்றி தோல் செய்யும் பணி மிகப்பெரியது. தோல் தீக்காயம் போன்றவற்றால் தோல் 80% பாதிப்படையும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகும். எனவேதான் தோல் பாதுகாப்பு என்பது அனைவருக்கும் முக்கியமானது.

உடலில் உள்ள உள்ளுறுப்புக்களை பாதுகாத்து, உடலுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் தோலில்தான் தற்காலத்தில் எத்தனையெத்தனை வியாதிகள். புதிய புதிய நோய்கள் கால சூழ்நிலைக்கு தகுந்தவாறு உருவாகிக்கொண்டே வருகின்றன.

குழந்தைகளுக்கு தோல் பாதிப்பு


குழந்தைகளுக்கு மிக எளிதாக தோல்பாதிப்பு ஏற்படுகிறது. எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் இவர்களுக்கு உடனடியாக ஒட்டிக்கொள்ளும். எனவேதான் குழந்தைகளை அதிக பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வெளியாட்கள் யாரும் குழந்தைகளை வெறும் கைகளால் தொட, தூக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பதும் இதற்காகத்தான். அதோபோல பலர் கூடும் இடங்களுக்கு (திருவிழா, சந்தைகள், ஷாப்பிங் மால்கள்) எங்கும் குழந்தகளை அதிகம் அழைத்துச் செல்லக்கூடாது.

பருவ வயதினருக்கு ஏற்படும் தோல்பாதிப்புகள்


பருவ வயதினருக்கு ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் பருக்கள்  ஏற்படுதல், அதிக வெப்பத்தால் பொடுகு, சொரியாசிஸ், சருமத்தொற்றுகள், வெண்புள்ளிகள் போன்ற நோய்கள் உருவாகின்றன.

பெண்களுக்கு ஏற்படும் தோல் பிரச்னைகள்

பெண்களுக்கு சருமத்தை பாதுகாப்பது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. பெரும்பாலும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் பெண்களுக்கு சூரிய வெளிச்சம் போதிய அளவு கிடைக்காமல் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. மேலும் சமையல் அறை, கழிப்பறை, சமையல் பாத்திரங்கள், வீடு கூட்டி பெருக்கி, கழுவுதல் போன்ற செயல்களினால் அவர்களுக்கு வெகு விரைவில் சரம பாதிப்புகள், தொற்றுகள் உருவாகி அவதிப்படுகின்றனர்.

skincare in tamil

மேலும் உடல் சூடு அதிகமாகி முடி உதிர்தல், தோல் நிறம் மாறுதல், அதிக எடை , தேவையில்லாத இடங்களில் முடி வளர்தல், பேறுகாலத்திற்கு பிறகு ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க் போன்றவைகள் பல தொந்தரவுகளாக இருக்கின்றன.

வயதானவர்களுக்கு ஏற்படும் தோல் பாதிப்பு:

40 வயதிற்கு மேல் தோலில் உள்ள செல்கள் மெல்ல மெல்ல இறந்து போவது அதிகரிக்கிறது. புதிய செல்கள் உற்பத்தி ஆவது குறைகிறது. இதனால் அவர்களின் தோல்கள் வறந்து போய், தடித்து காணப்படும். மேலும் தோலில் ஈரப்பசை குறைந்த வற்றிப்போகும்.

தோல்வியாதிக்கான காரணங்கள்:   • முழுமுதன் காரணமாக இருப்பது சுகாதாரமின்மை.
  • தோலை சரியாக பராமரிக்காமல் விடுவது
  • சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளாதிருத்தல்
  • தட்பவெப்ப நிலைக்கு தகுந்த உடை உடுத்தாதிருத்தல்
  • அழகு சாதனப்பொருட்கள் அதிகம் பயன்படுத்துவது
  • மன அழுத்தம்
  • அதிக வெயில்
  • புகைப்பிடித்தல்
  • மது அருந்ததுல்
  • சரும துவாரங்களில் ஏற்படும் அடைப்பு


போன்ற காரணங்களை பொதுவானதாக குறிப்பிடலாம்.

தோல் வியாதி எச்சரிக்கைகள் :


மனித உடல் பொறுத்தவரை எந்த ஒரு வியாதி வருவதற்கு முன்பு ஒரு சில அறிகுறிகளை தோற்றுவிக்கும். அதை சரியாக கவனித்து, உரிய நேரத்தில் சரி செய்துவிட்டால் உடல் நோயிலிருந்து தப்பிக்கலாம். இல்லையென்றால் அது முற்றிய பிறகு மருத்துவம், அது இது என்று அலைய வேண்டியதுதான்.

உடலில் ஆங்காங்கே சிவப்பு தடிப்புகள், கொப்புளங்கள், தோல் நிற மாற்றம், வாய்ப்புண், நகம் பாதிக்கப்படுவது, முடி உதிர்வு போன்றவை தோல் ஆரோக்கியம் குன்றுவதை அறிவிக்கும் முன்னறிவுப்புகள். இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் சிகிச்சை கடினமானதாக இருக்கும். தோலைப் பொருத்தவரை உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆபத்தான புற்றுநோய் போன்ற நோய்களில் கொண்டுபோய் விட்டுவிடும்.

சோதனை மற்றும் சிகிச்சை முறைகள்: 

தோல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதா என்பதை தோல், இரத்தப் பரிசோதனை  மற்றும் நகம், முடி போன்றவற்றின் செல்களை எடுத்து பயாப்சி முறையில் பரிசோதனை செய்வதன் மூலமாக நோய்களை கண்டறிய முடியும்.

தோல்/சரும ம் பாதுகாத்திட உதவும் உணவுகள் 


சந்தையில் கிடைக்கும் விதவிதமான கீரைகள், பச்சைக் காய்கறிகள் அனைத்துமே தோலுக்கு ஏற்றவைதான். நல்ல தரமான காய்கனிகளை வாங்கி வந்து, நல்ல தண்ணீரில் கழவி அவற்றை பச்சையாக உண்பதால் தோலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. தோல் பளபளவென சினிமா நடிகர்/நடிகைகள் போன்று மாறிவிடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இயற்கையாக கிடைக்கும் கரும்புச்சாறு, இளநீர், நுங்கு போன்ற பானங்கள் நல்லது. அதிக கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அளவான மாவுச்சத்து உணவுகள் , அதிக நார்ச்சத்து உணவுகள், சிறு தானிய உணவுகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு மட்டுமல்ல தோலுக்கும் மிக நல்லது.

அன்றாடம் குறைந்தது 5 லிட்டர் நீர் , (பழச்சாறு, இளநீர், நீர்ம உணவுகள்) எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் சிறுநீர் 2 லிட்டர் அளவிற்கு வெளியேறும் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். 

Post a Comment

0 Comments