முக அழகை பராமரிக்க குறிப்புகள் !


இயற்கையாக இருக்கும் முகத்தோற்றை மாற்றி, அழகாக வசீகரமாக தோன்ற செய்ய பெண்கள் செய்யும் செயல்கள் சில நேரங்களில் சிரிப்பை கூட வரவழைத்துவிடும். அந்தளவிற்கு முக அழகை பாரமரிக்க அவர்கள் அதிக மென்கெடுவார்கள். அவர்கள் சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தங்களுடைய அழகை வெளிக்காட்ட பிரம்ம பிரயத்தனம் செய்வர். வெளியில் சென்று உலாவும்போது, அவர்களைப் பார்த்து, "யெய்.. நீ ரொம்ப அழகா இருக்க.. என்ன சோப் யூஸ் பன்றே" என்று நண்பிகள் அவர்களை கேட்டு அதனால் அவர்கள் மிக மகிழ்வாக பதில் சொல்வதைதான் எதிர்பார்ப்பார்கள்.

முக அழகைப் பொருத்தவரை ஆண், பெண் என்ற பேதம் ஏதுமில்லை. இருபாலருமே தங்களுடைய முக அழகை பராமரிக்க கவனம் செலுத்துவார்கள். இங்கு இயற்கையான முறையில் முக அழகை பராமரிப்பு எப்படி என்பதைப் பார்ப்போம்.

முக அழகை பராமரிக்க குறிப்புகள்:

நீங்கள் உண்ணும் பழங்கள் அனைத்துமே முகத்தை பராமரிக்கப் பயன்படும். தக்காளி, பீட்ரூட், உருளைக் கிழங்கு, கேரட், ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்கள், தோல்கள் முகத்தை பளபளபாக்க கூடிய தன்மையை கொண்டுள்ளது.

தயிர், எலுமிச்சை சாறு, மஞ்சள், கடலைமாவு என அனைத்துமே முகத்திற்கு பேஸ்ட் செய்து பூசி, பராமரிக்க உதவுபவைகள்தான்.

முக அழகு நன்றாக இருந்தால் போதுமா? மற்ற உறுப்புகள் அழாகாக இருக்க வேண்டாமா?

உடலின் மற்ற பாகங்களையும் தூய்மையாக, அழகாக வைத்திருந்தால் மட்டுமே ஒருவரை அழகன் அல்லது அழகி என்று கூற முடியும். அந்த வகையில் மற்ற பகுதிகளையும் எப்படி பராமரிப்பது என்று இங்கு மேலும் தெரிந்துகொள்வோம்.

நக அழகைப் பராமரிக்க:

பசும்பாலில் பேரிச்சம் பழத்தை ஊற வைத்து அல்லது அரைத்து கலந்து பருகிவர நகங்கள் பலமடையும். உடையும் தன்மை குறையும். நகங்களை பளபளபாக்க செயற்கை கூறுகளைப் பயன்படுத்தாமல், இயற்கையாக கிடைக்கும் பாதாம் எண்ணையை தடவி வந்தால், நகங்கள் பளபளப்பு அடையும். பார்க்க சினிமா நடிகையின் நகங்கள் போன்று இருக்கும்.

உதடு/இதழ்களை பராமரிக்க:

உதடுகளை பராமரிக்க சிறந்ததாக இருப்பது பீட்ரூட். இது நம் சமையலறையிலேயே கிடைக்கும். அதில் குறிப்பிட்ட பகுதியை நறுக்கி உதடுக்கு பூசும் வகையில் லிப்ஸ்டிக் ஸ்டிக் வடிவில் நறுக்கி, அதை லிப்ஸ்டிக் எப்படி பூசுவோமோ அப்படி பூசி வந்தால் உதடுகள் நல்ல நிற மாற்றத்தைப் பெறும். நல்லதொரு இயற்கையான "லிப்ஸ்டிக்" ரெடி.

உங்கள் முகத்தைப் பராமரிக்க:

நன்றாக  பழுத்த பப்பாளிப் பழம் ஒன்றை எடுத்து, தோல் நீக்கி அதை மிக்சியில் போட்டு பேஸ்ட்போல அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அந்த பசையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து, நல்ல நீரில் உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள். முகம் பளபள தான் போங்க.

பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.

கழுத்தை பராமரிக்க:
நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான்.. அழகாக முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.

சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.

தோல்/சருமம் பராமரிக்க:

தேவையானவைகள்: ஈஸ்ட், முட்டைகோஸ் இலை

ஒரு ஸ்பூன் ஈஸ்ட் எடுத்து அதனுடன் முட்டைகோஸ் இலைச்சாறு கலந்துகொள்ளவும். அந்தக் கலைவையுடன்  ஒரு ஸ்பூன் தேன் கலந்து உடலெங்கும் பூசி வர, வெயிலில் கருத்த சருமம்  இயற்கையான நிறத்திற்கு மாறிவிடும். தொடர்ந்து இதைச் செய்து வர தோல் பளபளப்படையும். அருகில் உள்ளவர்கள், நண்பர்கள் உங்களைப் பார்த்து அது நீங்கள்தானா என ஆச்சர்யமடைந்து கேட்பார்கள். உண்மையிலேயே இது ஒரு அருமையான தோல் பராமரிப்பு பேஸ்ட் ஆகும்.

கண்களில் கருவளையம் நீங்க:

கண் பராமரிப்புக்கு உகந்தது வெள்ளரிக்காய்தான். ஆதிகாலம் தொட்டே கண்ணுக்கும் வெள்ளரிக்கும் ஒரு பந்தம் நிலவி வருகிறது. வெள்ளரி விதையை பொடி செய்து அதனுடன் பசுந்தயிர் சர்த்து பேஸ்ட் போல ஆக்கி கண்களின் கீழ், அதைச் சுற்றி இருக்கும் கருவளையதில் பூசி வர ஒரு மாத த்தில் கண்களைச் சுற்றி இருந்த கருவளையம் மாயமாய் மறைந்து, உங்கள் கண்கள் சினிமா நடிகையின் கண்கள் போல மின்னும்.

கருப்பு திட்டுகள் போக குறிப்புகள்:

சில பெண்களின் முகத்தில் கருப்பு நிற திட்டுகள் காணப்படும். வெயிலால் உருவாகிய அந்த திட்டுக்கள் என்ன சோப் போட்டாலும் போகாது அடம் பிடிக்கும். அதுபோன்றவைகளை "மங்கு" என குறிப்பிடுவர். அந்த மங்குவை போக்கிட நம்மிடம் ஒரு நல்ல யோசனை/அழகு குறிப்பு உள்ளது. அதை செயல்முறைப்படுத்தினால் சிலநாட்களில் மங்குவை இருந்த இடம் தெரியாமல் போக வைக்க முடியும்.

மங்கு போக குறிப்புகள்

குறிப்பாக கிராம புறத்தில் வெயிலில் அதிகம் வேலை செய்பவர்களுக்கு  முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என  எங்கு பார்த்தாலும் மங்கு காணப்படும். இவற்றைப் போக்க,


  • ஜாதிக்காய், 
  • சந்தனம், 
  • வேப்பங்கொழுந்து 


ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதில் போதுமான நீர் கலந்து நன்றாக அரைத்தெடுக்க வேண்டும். அந்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் மீது தடவி அது உலரும் வரை வைத்திருக்க வேண்டும். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வர மங்கு சிறிது சிறிதாக மங்கி 30 நாட்களில் மறைந்துவிடும்.

தோல் பிரச்னைகளுக்கு எப்பொழுதும் கொஞ்சம் நாட்கள் அதிகம் எடுக்கும் என்பதால் தொடர்ந்து செய்து வர வேண்டும். ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் பின்பற்றிவிட்டு, மறையவில்லை என ஏமாறக்கூடாது. எமது அனுபவத்தில் 3 மாதங்களில் தோல் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும். ஒரு சிலருக்கு ஆறுமாதங்கள் ஆகலாம்.

முக பாராமரிப்போடு உடல் பராமரிப்பு சரியாக செய்து வந்தால் உடல் நலம் மேம்படும். மனநலன் கூடும். மன நலம் நன்றாக இருந்தால், இயற்கையாகவே நீங்கள் பேரழகு பெற்று திகழ்வீர்கள்.

beauty tips for face

பெண்களுக்கான சிறப்பு அழகு குறிப்புகள்

மஞ்ஷளில் இறுக்ஹக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துஹள்ஹள் ஷறுமத்தில் ஏற்படக்கூடிய அலற்ஜிஹளிலிறுந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ழுங்ஹள் அத்துடன் ஒறு ஸ்பூன் மஞ்ஷள் தூளை சேற்த்து நன்றாஹ ஹலக்கி முஹத்தில் ஃபேஸ் மாஸ்க்காஹ போட வேண்டும். நன்றாஹ காய்ந்ததும் ஹழுவி  விடலாம்.
ஹற்றாழையில் இறுக்கும் ஷத்துக்ஹள் ஷறுமத்தை ஃபிரஸ்ஸாஹ வைத்திறுக்ஹ உதவுகிரது. வெள்ளரிச்சாறுடன் ஹற்றாழை ஜெல் ஹலந்து திணமும் இரவு படுப்பதற்கு  முன்னால் தடவிக் கொள்ழுங்ஹள். அரை மணி நேரம் ஹழித்து ஹழுவி விடலாம். இது ஷறுமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புஹள் மட்டுமல்ல ஷறும சுறுக்ஹங்ஹள்  ஏற்படாமலும் தடுத்திடும்.

உலற்ந்த ரோஜா இதழ்ஹழுடன் சிறிது பன்னீறும் ஷந்தணமும் அரைத்து முஹத்தில் தடவ தோலின் நிரம் பொலிவு பெறும். பால், ஹடலை மாவு, மஞ்ஷள், ஷந்தணம்,  அனைத்தையும் ஹலந்து முஹத்தில் தடவி குளித்தால் ஷறுமம் அளகாஹவும், பளபளப்பாஹவும் மாறும்.

வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாஹ அரைத்துக் கொள்ழுங்ஹள். ஓட்ஸ் தனியாஹ அரைத்துக் கொள்ழுங்ஹள். பின்ணரத்துடன் ஒறு ஸ்பூன் மஞ்ஷள்  தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடற் சேற்த்து தேவையாண அளவு தண்ணீற் சேற்த்து நன்றாஹ ஹலக்ஹ வேண்டும். அதனை முஹத்தில் தடவி ஸ்க்ரப் செய்து  வந்தால், உங்ஹள் முஹம் பளிச் பளிச்தான்.

Post a comment

0 Comments