உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

உடலில் உறுதி உடையவரே மனதில் உறுதி உடையவராம் என்று சொல்லுமளவிற்கு உடற்பயிற்சி அவசியமாகியுள்ளது. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்த தொழில்கள், வாழ்வியல் முறைகள் அனைத்தும் வேறு. தற்பொழுது இருக்கும் வாழ்வியல் முற்றிலும் வேறு. எனவேதான் அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியமாகின்றது. அலுவலகங்களுச் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியில் இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மனிதர்களுக்கு உடல் உழைப்பு குறைந்து, மூளை தொடர்பான வேலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஒவ்வொருவரும் உடலை பேசி காப்பதென்றால் கட்டாயம் நாளொன்றிற்கு குறைந்த பட்சம் 1 மணி நேரமாவது உடற்பயற்சி அவசியத்தேவையாகிறது.

அந்த ஒரு மணி நேரத்தைக் கூட ஒதுக்க முடியாமல் அலுவல், பணம் பணம் என்ற காலத்தின் பின்னே ஓடிக் கொண்டிருப்பவர்களே இன்று அதிகம். எப்படி இருப்பினும் நிச்சயம் உடற்சி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


காரணம் புதிய புதியதாக வளர்ந்து கொண்டிருக்கும் நோய்க்கிருமிகள், நோய்கள் தான். ஒருவரது உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால் நிச்சயம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி, யோகா போன்றவை அவசியம்.


அதுவும் காலையில் செய்யும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றால், அன்றைய பொழுது சுறுசுறுப்பாக வேலை செய்திட, மனம் இலேசாகிட உதவுகிறது என்பது ஆய்வு கூறுகிறது. மூளையின் செயல்திறனுக்கு உடற்பயிற்சி 100% உதவுகிறது. மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு, நினைவுத் திறன் அதிகரிக்கிறது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைபாடு (அல்சமைசர்) குறைந்து இயல்பான நினைவுத்திறன் அதிகரிக்கிறது.

udal payirchi


மன அழுத்தம் குறைக்க 


உடற்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம் குறைந்து இலேசாகும். இதனால் அன்றைய சிக்கல் நிறைந்த வேலைகள் மற்றும் புறச் சூழல் ஏற்படுத்தும் அசௌகரியங்களிலிருந்து விலகி புதியதாக பிறந்ததுபோல உணரலாம்.

இரத்த அழுத்தம் குறையும்


இரத்த அழுத்தம் அமைதியாக இருந்து கொல்லும் ஒரு அரக்கன் போன்றது. இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கொண்டு மனிதனை ஒரே போடா போட்டுத்தள்ளும் மிகப் பெரிய மயிறு அது. அதை ஒண்ட வெட்ட வேண்டுமானால் வாங்கிங், ஜாக்கிங், யோகா போன்ற அன்றாட உடற்பயிற்சி தேவை.

கடுமையான உடற்பயிற்சி - விளைவுகள்


ஜாக்கிங், ஜிம் போன்ற உடற்பயிற்சிகள் செய்யும்பொழுது உடல் வெப்பத்தை தோல் வழியாக வியர்வையாக வெளியேற்றும். இதன் மூலம் வெப்பம் வெளியாகி உடல் குளிர்ச்சிப் பெறும். இது உடலை பித்த சமநிலையை  சீராக வைக்கிறது.

ஜீரணத்தை சரி செய்யும் உடற் பயிற்சி 


கண்ட கண்டதையெல்லாம் தின்று தீர்த்து குடல் முழுவதும் உணவு கழிவுகளை நிரப்பி வைத்திருப்போம். உடற்சி மட்டும் இல்லையென்றால் அது துரித கதியில் ஜீரணமாகாமல் , அங்கேயே தங்கி கெட்ட கிருமிகளை உருவாக்கி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உடற்பயிற்சி செய்வதால் அதுபோன்று நிகழலாமல் எதைச் சாப்பிட்டாலும் சரியான அளவில் ஜீரணம் ஏற்பட்டு, கழிவுகள் அன்றாடம் வெளியேறுகிறது. இதனால் இரத்தத்தில் கிருமிகள் சேராமல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி


உடற்பயிற்சி சாதாரணமா ஒன்று அல்ல. அது உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி அளிப்பதோடு, வேறு எந்த நோயும் நம்மை தாக்காமல் இருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வலுப்படுகிறது. உடலில் வலு சேர்க்கும். உடல் உழைப்பு, பயற்சி இல்லாதவர்கள் வெகு விரைவில் ஏதேனும் நோய்க்கு ஆளாகி, மருத்துவமனையில்


ஜிம் செல்வோரின் கவனத்திற்கு: 


புதியதாக ஜிம் செல்வோர் எடுத்த உடனே கடின உடற் பயிற்சிகளை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஜிம் கோச் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே செய்து வரவும். ஆர்வ மிகுதியால் கடின உடற்பயிற்சிகளை செய்ய முனைந்தால் உடலில் இரத்தக்கட்டு ஏற்பட்டு, அடுத்த நாளே உடல் வலி வந்து , மீண்டும் ஜிம் பக்கமே செல்லாத அளவிற்கு மோசமான நிலைமை ஏற்பட்டுவிடும். எனவேதான் வார்ம் அப் பயற்சி மட்டுமே செய்தால் போதுமானது என பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். அதுவே சர்க்கரையின் அளவின் வெகுவாக கட்டுப்படுத்துகின்றது.

தீவிர நோயால் பாதிக்கபட்டவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா?


மருத்துவரின் ஆலோசனை பேரில் சர்க்கரை 2 டைப் நோயாளிகள் , அறுவை சிகிச்சை செய்த 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை செய்யலாம் என சமீபத்தி அமெரிக்க ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே உயிருடன் இருக்கும் வரை திடகாத்திரமாக உடல் நலத்துடன் இருக்க வேண்டுமானால் உடல் நிலைமை தகுந்தவாறு சின்ன சின்ன எக்சர்சைஸ் செய்து கொண்டே இருக்கலாம். நிச்சயம் அது உடலுக்கு ஏதும் தீங்கு விளைவிக்காது என்பதில் சந்தேகமில்லை. 

Post a comment

0 Comments