குழந்தை நலம் - பாதுகாக்கப்பட வேண்டிய 15 குறிப்புகள் !

குழந்தை உருவாவது முதல் அது பிறந்து வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்குள் மிக மிக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது பெற்றோரின் கடமை. சின்ன சின்ன விஷயமென்றாலும் பயந்து, மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் காட்டி, அவர்களை வளர்ப்பது என்பது சாதாரண காரியமில்லை. ஏனென்றால் முதல் 3 ஆண்டுகள் அவ்வளவு முக்கியமானதாகும்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள்:


1. குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேண கண்டிப்பாக பெற்றோர்கள் மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசிகள் மிக முக்கியம்.

2. வைரஸ் தாக்குதல்களால் அடிக்கடி குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல்தொற்று ஏற்படும். அதை கவனமாக கையாண்டு, மருத்துவர் சொல்லும் அறிவுரையை பின்பற்ற வேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை 100% பாதுகாக்க வேண்டும். இந்த விசயத்தில் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

3. குறிப்பிட்ட கால இடைவெளியில் குழந்தைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி போட்டு விட வேண்டும். தாய்பால் ஊட்டுவது மிக சிறந்தது. குறைந்த பட்சம் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் புகட்டுவது அவசியம். தாய்ப்பாலில் அதிகளவு சத்துக்கள், உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதில் இருப்பதால் கட்டாயம் தாய்ப்பால் கொடுத்தே ஆக வேண்டும்.

4. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு பயன்படுத்தும் துணிகளை டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்து அணிவிக்க வேண்டும். படுக்கைகளை அடிக்கடி மாற்றி சுகாதாரமாக வைத்திட வேண்டும்.

5. தவழும் குழந்தைகள் என்றால் கட்டாயம் அவர்களை இருவேளை குளிக்க வைப்பதோடு, அவ்வப்பொழுது மண்ணில் அல்லது தரையில் தவழ்ந்து வந்த பிறகு சோப்பு போட்டு கைகளை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.

6. துவத்த துணிகளை சூரிய ஒளியில் காய வேண்டும். அப்போதுதான் பாக்டீரியா போன்ற தொற்றுகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும்.

BEST FOOD FOR CHILD


7. சத்துக் கஞ்சி காய்த்துக் கொடுப்பது குழந்தைகளுக்கு மிக அவசியம்.
கோதுமை, கம்பு, கேழ்வரகு, பாதாம், முந்திரி, பிஸ்தா, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை, போன்றவற்றை 50 கிராம் அளவிற்கு எடுத்து, அவற்றை தனித்தனியாக வறுத்து, அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கஞ்சி காய்ச்ச வேண்டும். தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அவற்றை புகட்டலாம். அல்லது அவற்றை மாவு ஆக்கி, காற்றுப் புகாத டின்களில் அடைத்து வைத்துக்கொண்டு, நன்றாக காய்ச்சிய பாலில் அரைத்த தானிய மாவை கலந்து குடிக்க வைக்கலாம். 6 மாதம் நிறைவடைந்த பிறகு இதுபோன்ற செய்யலாம்.

8. கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். இவற்றுடன்
1ஸ்பூன் துவரம்பருப்பு,
2 ஸ்பூன் அரிசி
ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

அதில் சீரகம், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி சாதம் குழைய வேக விடவும். குழைந்த சாதத்தை எடுத்து, அதில் சிறிதளவு நெய் சேர்த்து , கடைந்து கொடுத்தால் சாப்பிடாத குழந்தையும் சாப்பிடத் துவங்கும். நெய் போட்டு கடைந்த அந்த பருப்பு கடையல் சாதம் குழந்தைகளின் பேவரிட் உணவாக மாறிவிடும்.

ஆப்பிள் உணவு


ஆப்பிளை நன்றாகக் கழுவி விட்டு, அதை இட்லி பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும். இட்லி தட்டின் மீது வைத்து ஆவியில் வேக வைப்பது மிக நல்லது. நன்றாக வெந்த பிறகு அதில் உள்ள தோலை நீக்கி விட்டு, அதை உருளை கிழங்கு போல மசித்து குழந்தைக்கு உண்ணக் கொடுக்கலாம்.

ருசிக்காக அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்து கொடுப்பது நல்லது. அவ்வாறு தினமும் கொடுத்துவர குழந்தைகுக்கு அது நல்ல சத்தான உணவாக மட்டும் அல்லாமல், எளிதில் ஜீரணம் ஆக கூடியதாகவும் இருக்கும்.

 சாப்பிட மிருதுவாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும். அன்றாட உணவில் இதையும் ஒரு உணவாக கொடுக்கலாம்.

#குழந்தைவளர்ப்பு #குழந்தைஉணவு #சத்துணவுPost a Comment

0 Comments