பல் சொத்தை ஆயுசுக்கும் வராமல் தடுத்திட

சொத்தைப்பல் வராமல் தடுக்க

கன்னம் வீங்கி, கடு கடு வென வலியைத் தந்து தூங்க விடாமல் செய்து, நாட் கணக்காக பெரும் வேதனையைத் தருவது சொத்தைப்பல். அது வராமல் தடுத்திட வேண்டுமானால் கட்டாயம் இதையெல்லாம் நீங்கள் செய்தே ஆக வேண்டும்.

சொத்தைப் பல் வரக் காரணங்கள்: 

அதிக இனிப்புகள் சாப்பிடுவதுதான் மிக முக்கியமான காரணம். அது மட்டுமின்றி பற்களை நன்றாக சுத்தப்படுத்தாமல் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கிறது. குறிப்பாக பண்டிகைக் காலங்களில் அதிக அளவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டு ஏப்பம் விடுவோம். அந்த மகிழ்ச்சியில் பற்களைப் பற்றிய எண்ணமே இருக்காது. உறவினர்களுன் சேர்ந்து கொண்டாடும் தீபாவளி பண்டிகை போன்ற விழாக்காலங்களில் இது மிக அதிகம்.

சரி, இனிப்பு சாப்பிட்டாகிவிட்டது. சூடாக டிபனும் சாப்பிட்டாகிவிட்டது. அடுத்து என்ன செய்வது? நிச்சயமாக பல் துலக்குவது தான். மிகச் சரியான பிரஸ் கொண்டு நன்றாக ஈறுகளையும் சேர்த்து, மிதமான அழுத்ததுடன் பற்களை துலக்குவது சாலச் சிறந்தது. நூலைக் கொண்டும் பற்களின் இடுக்குகளில் விட்டு இடுக்குகளில் படிந்திருக்கும் அழுக்கு, சிறு துகள்களை வெளியேற்றலாம்.


நன்றாக வாய்க்கொப்புளித்தல்

பல் சுத்தத்திற்குப் பிறகு நன்றாக வாய்நிறைய தண்ணீர் விட்டு ஒரு நிமிடம் வரை கொப்பளித்து துப்ப வேண்டும். அப்பொழுது வாயில் உள்ள உணவு துணுக்குள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு விடும். முடிந்தால் OIL PULLING செய்யலாம். அன்றாடம் காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணையை வாயில் ஊற்றிக் கொண்டு குறைந்த பட்சம் 15 நிமிடம் அதிக பட்சமாக 30 நிமிடம் வரை எண்ணையை வாயில் வைத்துக்கொண்டு கொப்பளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வாயில் உள்ள எண்ணை உமிழ் நீருடன் கலந்து நீர் போல ஆகும் வரை கொப்புளிக்க வேண்டும். எண்ணைய் பசை நீங்கி அது தண்ணீர் போல ஆகியவுடன் அதை வாஸ் பேசினில் கொப்புளித்து விடவும். இது உடலுக்கு அதிக நன்மை தரும் மிக்சிறந்த முறையாகும்.

pal sothai thaduppu


இப்படிச் செய்வதால் வாயில் உள்ள கெடுதல் தரும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. நாக்கு, பல், தொண்டை என அனைத்துமே சுத்தமடைகின்றன. நாளடைவில் "அல்சர்" போன்ற தொந்தரவுகளால் ஏற்படும் "துர்நாற்றம்" கூட சரியாகிவிடும். வாயில் ஏற்படும் கெட்ட வாடை அகன்றுவிடும். பற்களை தினமும் சுத்தப்படுத்தபடுவதால் சொத்தைப் பல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும்.

கால்சியம் உணவுகள் முக்கியம்:


பற்கள் திடமாக இருந்திட கால்சியம் சத்து மிக மிக அவசியம். எனவே அது நினைந்திருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சீஸ், பால், யோகர்ட் போன்ற உணவுகளில் அதிக கால்சியம் நிறைந்திருக்கிறது. முட்டை கூட ஒரு கால்சியம் நிறைந்த உணவுதான். இதனால் எலும்புகளின் அதிக உறுதியுடன் வலுவாக இருக்கும்.

உணவிற்கு பிறகு வாய் கழுவுதல்:

உணவு உண்ணும்போது நன்றாக மென்று தின்று, உமிழ் நீருடன் கலந்து விழுங்க வேண்டும். அதிகமான அசைவுகள் இருக்கும்போது, உணவை இரைப்பை இயற்கையாகவே ஏற்றுக்கொள்ளும். அவ்வாறு உணவு உண்ட பின், ஒவ்வொரு வேளை உணவிற்குப் பிறகும் வாயை நன்றாக அலசி கழுவ வேண்டும். அப்போதுதான் பற்கள் மற்றும் கடைவாய்களில் தங்கியுள்ள உணவுத் துணுக்குகள் வெளியேறும். இதனால் அதிக பட்சமாக கிருமிகள் உருவாவதை தடுத்திடலாம்.

பல் துலக்குதல்

பல் துலக்குதலை சிலர் ஏனோ தானோ என்று துலக்கி விட்டு உணவு உண்கின்றனர். உண்மையிலேயே பற்கள் அக்கறை கொண்டு மிக மெதுவாக, இதமாக பற்களை துலக்கி சுத்தப்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்களாவது பற்களை அனைத்து பகுதிகளிலும் பிரசில்ஸ் படும்படி அழுந்த தேய்த்து கொடுக்க வேண்டும். ஈறுகளையும் மிதமாக தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். முறையாக பல் துலக்கினால் எந்த கிருமிகளும் வாயில் அண்டாது.

மௌத் வாஷ் :

மௌத் வாஷில் ஆன்ட்டி-பாக்டீரியல் இருப்பதால் அதிக அளவு பாதிப்பு தரும் பாக்டீரியாக்களை நீக்கி, வாயை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. குறைந்த பட்சம் ஆறு மாத த்திற்கு ஒரு முறையாவது "பல் டாக்டர்" ஐ சென்று உங்களுடைய பற்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. மருத்துவரின் ஆலோசனை பேரில் பற்களை பராமரித்து வந்தால் பல் சொத்தை ஆயுசுக்கும் வராவே வராது.

சொத்தைப் பல் ஆபத்து

சொத்தைப்பல் தொடக்கத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் அது பெரும் ஆபத்தில் கொண்டுப்போய் விட்டுவிடும். நாட்கள் ஆக ஆக பல்லில் ஓட்டை விழுந்து, அது ஈறுகள் வரை சென்று பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதன் பிறகு வைத்தியம் செய்வதால்செலவு அதிகமாகும். எனவேதான் பற்களை முறையாக பராமரிக்க வேண்டும் என "டென்ட்டல் டாக்டர்கள்" அறிவுறுத்துகின்றனர்.Post a Comment

0 Comments