தோல் வியாதிகள் - மருத்துவம்

தோல் வியாதிகள் குறித்து இன்று பலரும் கவலைப்படுகின்றனர். மாறி வரும் சீதோஷ்ன நிலை, காலநிலை, தட்பவெட்பம், மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபாடு காரணமாக உலகின் 99% நபர்கள் ஏதேனும் ஒரு தோல் வியாதியால் பாதிக்கப்படுகின்றனர். நம் இந்திய நாட்டின் கிராம புற, நகர்ப்புற பகுதிகளில் தோல் பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக ஆற்றங்கரையோரத்தில் குடியிருப்போர், தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், அந்த ஆலைகளின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர் தோல் தொல்லைகள் அதிகம் உள்ளன.


தோல் வியாதிகளுக்கு இயற்கை மருத்துவம் உண்டா? என்னென்ன தோல்வியாதிகள் உள்ளன. அவற்றை எப்படியெல்லாம் இயற்கை முறையில் தீர்த்திடலாம் என்பது குறித்த  விவரங்களை இந்தக் கட்டுரையில் நீங்கள் பெற்றிடலாம். மேலும் இதில் பதிவிடப்படும் மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்துவதற்கு முன்பு, ஒருமுறை உங்களது மருத்துவரை அணுகி, உங்களுக்கான பிரச்னை என்ன என்பதை உறுதி செய்து கொண்டு, இந்த மருத்துவத்தைப் பின்பற்றினால் எனக்கு குணமாகுமா என்பதை தெரிந்துகொண்டு மருத்துவம் செய்துகொள்வது நல்லது.

tholviyathi maruthuvam


தோல் வியாதிகளின் வகைகள்

 பொதுவாக தோல் வியாதிகளை 5 வகையாக பிரிப்பார்கள். அவைகள்:
1. சொறி சிரங்கு
2. பொடுகு அரிப்பு
3. பருக்கள்/கொப்புளங்கள்
4. தோல் அழற்சி
5. வெண்புள்ளி நோய்

இந்த 5 வகையான நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் அருமையான தீர்வு உண்டு. தொடர்ந்து 48 நாட்கள் அவற்றை பின்பற்றினால், எந்த வகையான தோல் வியாதியும் பட்டென காணாமல் போகும்.

1. சொறி சிரங்கு


இது மிக கடுமையான அரிப்பு உணர்வை ஏற்படுத்தும். தொடர்ந்து அரித்துக்கொண்டே இருப்பதால் சொறிய சொறிய சுகமாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அதில் ஒரு வித எரிச்சல் உண்டாகி மனுசனை காண்டாக்கி விடும். இது ஒரு வித நுண்ணியிரிகளால் ஏற்படுவதாகும். இது மிக எளிதாக பரவக்கூடிய நோயாகும். சிறு வயது குழந்தைகளுக்கு மிக எளிதில் தொற்றும். மருத்துவமனை, சந்தை, பள்ளிக்கூடம் போன்ற மக்கள் நெருக்கமிக்க பகுகளில் இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவி விடுகிறது.

வைத்தியம்: 


இதற்கு கட்டாயம் வைத்தியம் செய்தே ஆக வேண்டும். இதுபோன்ற தொற்று வியாதிகளுக்கு சித்த வைத்தியத்தைவிட, ஆங்கில மருத்துவமே சிறந்தது. உடனடி குணம் அளிக்கக்கூடியது. மருத்துவரை நாடி பிரச்னை என்னவென சரியாக கூறிய பிறகு அவர் கொடுக்கும் சொறி நீக்கும் மருந்தினை பாதித்த பகுதிகளில் தடவி விட வேண்டும். சுமார் 8 மணி நேரம் கழிந்த பிறகு சொறிய வேண்டும் என்ற உணர்வு படிப்படியாக குறையும். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு பள்ளி, கல்லூரிகள், மற்றும் அலவலகங்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் செல்லாலாம். அதற்கு முன்பு சொறியை உண்டாக்கிய கிருமிகள் உங்கள் உடலிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதா என நீங்கள் உறுதி செய்துகொள்வது முக்கியம்.Post a comment

0 Comments