சிம்பிள் ஹோம் ரெமிடி - ஓர் அறிமுகம்

ஆங்கிலத்தில் simple home remedy என்றால், தமிழில் எளிய வீட்டு மருத்துவம் என்ற பொருளில் இந்த வலைத்தளத்திற்கு பெயர் வைத்திருக்கிறோம். இந்த வலைத்தளத்தில் உடல் நலன் பேணுவதற்கான Health Tips களை அள்ளி வழங்கவிருக்கிறோம்.

இதில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் மற்றும் பெரியவர்கள் என வயது சார்ந்து வரும் பல்வேறுபட்ட நோய்களுக்கு "மருத்துவ குறிப்புகள்" வழங்கவிருக்கிறோம். குறிப்பாக மிக எளிதாக அந் நோய்களை வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே விரட்டும் வழிமுறைகளை தரவிருக்கிறோம்.

பொது மருத்துவம், பெண்களுக்கான மருத்துவம், குழந்தை பராமரிப்பு, ஆரோக்கிய சமையல் குறிப்புகள் என பல்வேறு தரப்பட்ட உடல் நலனை பேணக்கூடிய பயனுள்ள கட்டுரைகள் இங்கு வெளியிடப்படும்.

எப்படி? எந்தெந்தப் பொருட்களை சேர்த்தால், என்னென்ன நோய்களுக்கு அது மருந்தாகும் என்பதை நமது "சித்த மருத்துவர்கள்" ஆலோசனையின் பேரில் தரவிருக்கிறோம்.

எனவே இந்த இணையதளம் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அது மட்டுமில்லாமல் பெண்களுக்குத் தேவையான "அழகு குறிப்புகள்" இடம்பெறும்.

SIMPLE HOME REMEDY


மேலும் உடலை திடமாக வைத்திட உதவும் "உடற்பயிற்சி" குறித்த தகவல்களும் இங்கு வழங்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இதய நோய் பாதிப்பிலிருந்து 40 வயதிற்கும் மேற்ப்பட்டவர்கள் எப்படி தப்பிக்கலாம்? எந்தெந்த உணவுகளை உட்கொள்ளாலாம்? எதுபோன்ற உடற்பயற்சி மேற்கொள்ளலாம்? இந்த வயதில் வேறென்ன நோய்கள், தொற்றுக்கள் உருவாகும்? அவற்றை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்பது போன்ற அருமையான தங்கமான குறிப்புகள் வழங்கப்படும்.

கைகால், முட்டி முழங்கால்களில் ஏன் வலி ஏற்படுகிறது? அதற்கு காரணம் என்ன? எப்படி கால்சியம் பற்றாக்குறை வராமல் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், எதுபோன்ற ஓய்வுகளை எடுக்க வேண்டும். கண் பார்வை மங்கல், கண்களில் திரை விழுதல், பூ விழுதல் போன்ற பாதிப்புகளிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? சர்க்கரை வியாதி வராமல் இருக்க எதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், சர்க்கரை நோய் வந்தால் எப்படி இரத்த சக்கரையை சீராக வைத்துக்கொள்ளலாம் என்பது போன்ற சொர்க்கலோக தரமிக்க நல்லதொரு குறிப்புகளை இந்த வலைத்தளத்தின் மூலம் பெற்றிடலாம்.

குழந்தைகள் பிறந்தது முதல் வளர்வது வரை என்னென்ன செய்ய வேண்டும்? எதுபோன்ற தடுப்பூசிகளை மேற்கொள்ள வேண்டும்? எந்தெந்த வயதில் எதுபோன்ற உணவுகளை அவர்களுக்கு அளிக்கலாம் என்பதும், இங்கு விளக்கமாக பதியபடும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் தோல் பாதிப்புகள் , அதற்கான மருத்துவம் மற்றும் பராமரிப்பு முறைகள் ஆகியவற்றை இங்கு தெரிந்துகொள்ளலாம். ஒரு மனிதனின் தோற்றம் அழகு சேர்ப்பது மனிதனின் மிகப்பெரிய உறுப்பான தோல்தான். அதை எந்த காரணம் கொண்டும் பாராமரிக்காமல் விட்டுவிட்டால், பிறகு என்னென்ன நிகழும், எதுபோன்ற அவஸ்தைகளை பட வேண்டும் என்பது குறித்தும் இங்கு விரிவாகவே காண விருக்கிறோம்.

சமீபத்தில் வைராலாக பரவி வரும் "மர்ம காய்ச்சல்" குறித்த விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்படும். மேலும் டெங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் மற்றும் மலேரியா காய்ச்சல் அதன் பாதிப்புகள், அதனால் ஏற்படும் இரத்த பாதிப்புகள் குறித்தும் இங்கு விரிவாக பதியப்படும்.

வாரம் ஒரு பதிவாக இங்கு பதிவதாக "சிம்பிள் ஹோம் ரெமிடி" வலைத்தள எழுத்தாளர்கள்/ பங்களிப்பார்கள் உறுதியளித்துள்ளனர். எனவே இந்த வலைத்தளத்தில் உள்ள பதிவுகளை உங்களுடைய சொந்தங்கள்/ நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து அவர்களுக்கு உடல் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்க உதவுமாறு சிம்பிள்ஹோம்ரெமிடி வலைத்தளம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
அட்மின்,
சிம்பிள்ஹோம்ரெமிடி குழு.

இப்படிக்கு,
SIMPLE HOME REMEDY TEAM. 

Post a comment

0 Comments