குழந்தை உணவு | டீ கொடுப்பது தவறா?

குழந்தைகளுக்கு டீ கொடுக்கலாமா என்ற கேள்வி இன்று பல பெற்றோர்களுக்கும் இருக்கிறது. ஒரே வரியில் சொல்வதானால் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் இதே தான். டீ, காபி போன்ற உற்சாக பானங்கள் உடனடி சுறுசுறுப்பை தருவதால் உலகில் உள்ள பலரும் இந்த பானங்களை அருந்துகின்றனர். அதில் உள்ள தீமைகளை அறியாமல் செய்யும் தவறு அது.

டீயில் உள்ள குறைபாடு: 


டீ - இல் Tea ல் உள்ள அமிலம் குழந்தைகளின் இரைப்பையில் புண்ணை ஏற்படுத்தும். அதில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் போன்ற ஆசிட் பொருட்கள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே முடிந்தவிற்கு குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இதை குடித்தப் பிறகு அடுத்த 4 மணி நேரத்திற்கு பசி உணர்வு ஏற்படாது. பசி உணர்வை தடுப்பதால், இயற்கையான முறையில் உணவு எடுத்துக்கொள்ளும் வீதம் குறைந்து, நாளடைவில் உடல் உணவு மண்டலத்தில் உள்ள உள்ளுறுப்புகளின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு உடலில் தேவையில்லாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

தேனீரில் உள்ள வேதிப்பொருள்:


டீயில் ஒரு அடிமைப்படுத்தும் பொருள் உள்ளது. எப்படி சிகரெட்டில் நிகோடின் என்ற மோசமான புற்றுநோயை உண்டாக்கும் பொருள் உள்ளதோ, அதுபோல டீயில் கேபின் என்ற பொருள் 2% சதவீதம் உள்ளது. அது அடிக்கடி டீ குடிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும். இது நரம்பு மண்டலத்தைத் தூண்டும் பண்பு கொண்டது. இதனால் முதலில் சுறுசுறுப்பு உணர்வு ஏற்பட்டாலும், அதன் பிறகு அதனை அடக்கிவிடும். இதனால் சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. டீ குடிக்கும் பழக்கத்தை விட்டால், கைகால் நடுக்கம், தலைவலி, மயக்கம் கூட ஏற்படுத்தி விடும். ஏறக்குறைய மது குடிப்பது போலதான் இந்த டீயும்.

டீ பருகுவதால் ஏற்படும் தீங்கு


இது உடல் வறட்சியை ஏற்படுத்தக்கூடிய பானம் ஆகும். உடலில் போதுமான நீர் இல்லை என்றாலும், அதிகளவில் சிறுநீரை வெளியேற்றச் செய்யும் மோசமான செயலை செய்யும். இதனால் நாளடைவில் இரு சீரகங்களும் அதிக சிரத்தை எடுத்து வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படும். இதனால் வெகு விரைவில் சிறுநீரகங்களின் பணி புரியும் தன்மை குறைந்து, அதனால் சிறுநீரக பாதிப்புகள் உருவாகும்.

சிலருக்கு டீ குடித்தால் தான் மலம் போகும் என்ற நிலை இருக்கும். ஆனால் அது உண்மையல்ல. சரியாக சொல்ல வேண்டும் என்றால் டீ குடிக்கும் பழக்கத்தால் மலச்சிக்கல் வர வாய்ப்புண்டு. மேலும் அடிக்கடி டீ குடிக்கும் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் போகும். இதனால் அவர்களின் உடல் வறட்சி ஏற்பட்டு, சரும பாதிப்புகள் உருவாகும்.

தேனீர் உடல் நலனுக்கு கேடு


டீக்குடிப்பதால் ரத்த சோகை ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு. இதில் உள்ள அல்காய்டு என்ற வேதிப்பொருள், குடல் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச் சத்தை உறிய விடாமல் தடுக்கிறது. இதனால் இரத்த சோகை போன்ற நோய் உண்டாக வாய்ப்பு ஏற்படும். இரும்புச் சத்து குறைபாடால்தான் இந்த வகை நோய் உண்டாகிறது. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் டீ கொடுத்துக் கொண்டிருந்தால், உடனடியாக அந்த பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். சிறுக சிறுக குறைத்து, இறுதியில் டீ கொடுக்கும் பழக்கத்தை மாற்றிவிடுவது நல்லது.

டீக்கு மாற்று பானங்கள் !


அதற்குப் பதிலாக பழச்சாறுகள், சாலட்கள், பால், முட்டை, காய் கறிகள்  போன்ற சத்து மிக்க பொருட்களை கொடுத்துப் பழக்கலாம். நார்ச்சத்துமிக்க காய்கறிகள் அனைவரது உடலுக்கும் நல்லது.

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்


புதிய தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு என்ன வகை உணவு கொடுக்கலாம் என்பதில் பல சந்தேகங்கள் எழும். வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். பெரியவர்கள் இல்லாத வீட்டில் நல்ல குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைகளுக்கான உணவுப் பட்டியலைப் பெற்று, அதன்படி நடைமுறைப்படுத்தலாம்.

குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்கு பிறகு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம். திட உணவுகள் கொடுத்தாலும் கூட, தாய் பால் தருவதை நிறுத்திடக்கூடாது. திட உணவு என்பது கூடுதல் உணவு தானே ஒழிய அதுவே பிரதான உணவு கிடையாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு முதல் உணவு

முதன் முதலில் உணவு கொடுக்கும்பொழுது பரீட்சார்த்த முறையில் மிக குறைவாக உணவை தயார் செய்து கொடுத்துப் பழக வேண்டும். அதன் பிறகு, அந்த உணவை குழந்தை ஏற்றுக்கொள்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். உணவால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகு அந்த உணவை குழந்தைகளுக்கு தாராளமாக ஊட்டலாம். ஒரு வேளை உங்கள் குழந்தை உணவு எடுத்துக்கொள்ள மறுத்தால், அது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. புதிய பழக்கம் என்பதால் சில குழந்தைகள் உணவு எடுத்துக்கொள்ள மறுக்கும். தாய்ப் பால் மட்டுமே பருகி பழகப்பட்ட குழந்தையின் சுவை உணர்வுகள் புதிய சுவையை கண்டு மிரளும். இதனால் பயம்கொள்ளத் தேவையில்லை.

வேறு ஒரு புதிய வகை உணவை தயார் செய்து கொடுத்துப் பார்க்க வேண்டும். பொதுவாக 6 மாத த் திற்கு பிறகு குழந்தைகள் திட உணவுகளை எடுப்பதற்கு தயாராகிவிடுவார்கள். ஆனால் சில குழந்தைகள் கூடுதலாக 2 மாதங்கள் எடுத்துக்கொள்வார்கள். இதனால் 6 மாத குழந்தை திட உணவை எடுக்க மறுக்கிறதே என்ற குழப்பம் வேண்டாம்.
இதுபோன்று குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உடல்நிலையை பேணிக்காத்திட சுத்தமான பழச்சாறுகள், பால், அரிசி கஞ்சி, கோதுமை, கேழ்வரகு கஞ்சி போன்றவற்றில் தயார் செய்யப்படும் கஞ்சி வகைகளை கொடுத்து வளர்க்கலாம். கடைகளில் விற்கப்படும் உடனடி உணவு வகைகள் கொடுத்தால் குழந்தையின் உடல்நலம் கெடுவதோடு, மன நலமும் கெடும்.

பெற்றோர்களுக்கு குழந்தைகளின் உடல் நலனில் ஏற்படும் மாற்றங்களால் மன அழுத்தம் கூடி, அது சரியாகும்வரை அவர்களுடைய வேலையும் கெட்டு திரிவார்கள்.


குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள்: 

குழந்தைகளுக்கு சிறு வயது முதல் கொடுக்கப்படும் உணவுகளே அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிகிறது. எனவேதான் குழந்தை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சி சரியாக அமைய எந்தெந்த உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை இங்கு அறிந்துகொள்வோம்.

கோழி முட்டை: 

இதில் அதிக புரதச் சத்து நிறைந்திருப்பதால் குழந்தைகளின் உணவில் இது கட்டாயம் இடம்பெற வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுவதோடு செல்கள் அதிக வளர்ச்சிப்பெற பெரிதும் துணைபுரிகிறது முட்டையின் புரதம். நீரில் நன்றாக வேக வைத்த முட்டையை நாளொன்று ஒன்று வீதம் கொடுத்து வர குழந்தைகள் அபரிதமான வளர்ச்சியை அடைவர். பொரித்த முட்டையைவிட அவித்த முட்டையே சிறந்தது.

தானிய வகைகள்: 

முழுதானியங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற உணவாகும். பருப்பு வகைகள் குழந்தைகளின் வளர்ச்சி அதிக பங்கு வகிக்கிறது. இவ்விரு உணவு வகைகளும் அவர்களின் மெட்டாபாலிசம் சீராக வேலை செய்ய துணைபுரியும். எனவேதான் குழந்தைகளின் ஆரம்ப உணவாக பருப்பு மற்றும் முட்டைகளை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் குழந்தை நன்றாக ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் இதுபோன்ற உணவுகளை அன்றாடம் கொடுத்துப் பழக்கக வேண்டும்.

பால் உணவுகள்: 

குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவ கால்சியம் சத்து மிகுதியாக தேவைப்படும். எனவதான் பால், முட்டைகளை கொடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. பால் பருகுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. கால்சியம், வைட்டமின் டி, புரதச் சத்து போன்றவை இதில் நிறைந்துள்ளதால் இதனை தவறாமல் குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.

சிக்கன் /பிராய்லர்

சிக்கன் குழந்தைகளுக்கு மிகச்சிறந்த உணவு. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். பிராய்லர் சிக்கன் கோழியை காட்டிலும், வீட்டிலும், காட்டிலும் ஓடி ஆடி திரிந்து வளரும் நாட்டுக் கோழிக்கறி குழந்தைகளுக்கு மிக ஏற்ற உணவாகும். அது கிடைக்காத பட்சத்தில் பிராய்லர் கோழிக் கறியை குழந்தைகளுக்கு நன்றாக வேக வைத்து மசித்து கொடுக்கலாம். வாரம் ஒரு முறையாவது சிக்கன் உணவை குழந்தைகளுக்கு கொடுத்து வர வெகு விரைவில் வளர்ந்து பெரிய ஆளாக மாறிவிடுவர்.

சோயாபின் உணவு

இதில் அதிக புரதச் சத்து நிறைந்திருப்பதால் அசைவம் உண்ணாத குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். சிக்கன், முட்டை சாப்பிடாத குழந்தைகளின் வர பிரசாதமாக இருப்பது இந்த பீன்ஸ் வகைகள் காய்கள் தான்.

பசுங் காய்கறிகள் 
இரும்புசத்து சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி, ஏ, கே போன்ற சத்துக்கள் அதிகளவு வேண்டுமெனில் பசுங் காய்கனிகளை குழந்தைகளுக்கு அதிகளவு கொடுத்து வர வேண்டும். குறிப்பாக கேரட், பீன்ஸ், ப்ரோக்கோலி மற்றும் கீரைகள் மிகச் சிறந்த உணவாக கருத்தபடுகிறது.

பழுத்தப் பழங்கள்: 


நன்றாக காய்த்துப் பழுத்தப் பழங்களை குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம் அதிகளவு ஊட்டச்சத்தினைப் பெற முடியும். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சைப் போன்ற நீர் நிறைந்த பழங்கள், சப்போட்டா, வாழைப்பழம், சாத்துக்குடி, ப ப்பாளிப்பழம் போன்ற பழங்கள் அனைத்துமே குழந்தைகளுக்கு உகந்தவைதான். சீசனுக்கு கிடைக்கும் பழங்கள் அனைத்தையும் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப கொடுத்துப் பழக்கலாம்.

குழந்தைகளின் வளர்ச்சியில் பிரச்னை

குழந்தைகளின் உடலில் சீரான வளர்ச்சி இல்லை என்றால் அவர்களின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்னையாக அது உருவெடுத்துவிடும். எனவேதான் போதிய ஊட்டச் சத்துமிக்க உணவுகளை பார்த்து பார்த்து வாங்கி, குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும். கடைகளில் விற்கும் இன்ஸ்டன்ட் உணவுகளை வாங்கிக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டு, அது அவர்களின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி முதலானவற்றில் பாதிப்பு ஏற்படுத்திவிடும். எதிர்காலத்தில் அவர்களின் உடல் நோய்கள் தங்கும் கூடாரமாக மாறிவிடும். எதிர்ப்புச் சக்தி குறைவதால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு அதிக செலவு வைக்க கூடிய மருத்துவங்களை செய்யும் நிலைக்குத் தள்ளப்படும்.

இளம்பெற்றோர்கள் சோம்பேறித்தனம் படாமல் கொஞ்சம் நேரம் அதிகமாக ஆனாலும் கூட பரவாயில்லை என்று முன்னதாக காய்கறி, பழங்கள், கேழ்வரகு கஞ்சி போன்றவற்றை வைத்து குழந்தைகளுக்கு பொறுமையாக கொடுத்து அவர்களை வளர்க்க வேண்டும். இளம் வயதில் கிடைக்கும் சத்துக்கள்கள் ஒரு மனிதனை 100 வயது வரை வாழ வைக்கும். இன்றைய முதலீடு, நாளைய வளர்ச்சி என்பதை குழந்தைகளின் உணவு கொடுக்கும் நிகழ்விலும் கவனம் வைக்க வேண்டும். நல்ல மண்ணில் வேர் செழிக்க நீர், உரம்மிட்டு சரியான சூரிய வெளிச்சம் படும் வகையில் மரக்கன்றை வைத்து, அதை ஆடு மாடுகள் மேயா வண்ணம் வேலியிட்டு பாதுகாத்து வளர்ப்பது போல குழந்தைகளின் உணவு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்தி அவர்களுக்கு போஷாக்கான உணவுகளை வழங்கி வளர்க்க வேண்டும். நேரமில்லை, அலுவல் அது இது என தேவையில்லாத காரணங்களை கூறிக்கொண்டு குழந்தைகளை கவனிக்காவிட்டால், அவர்கள் நோஞ்சான்களாகவே இருந்து விடுவர்.

உங்கள் குழந்தை கொழுகொழு தளதளவென இருக்க வேண்டுமா? அல்லது நோஞ்சானாக இருக்க வேண்டுமா என்பதை நீங்கள் முடிவெடுதுக்கொள்ளுங்கள்..!Post a comment

0 Comments