பெண்களுக்கான அழகு குறிப்புகள்

அழகான பெண்கள் கூட மேக்கப் போடும் காலம் இது.தன்னை அழகாக காட்டிக்கொள்வதில் அழகு தேவதை முதல் சுமாரான பிகர் வரை அனைவருமே போட்டோ போட்டிக் கொண்டு, "மேக்கப்" சாதனங்களை வாங்கி குவிக்கின்றனர். எப்படியாவது தன்னை ஒரு அழகியாக காட்டிக்கொள்ள பெண்கள் மென கெடுகின்றனர். இயற்கையிலேயே பெண்கள் அழகு தான் என்றாலும், பெண்களின் கூட்டங்களில் தான் மட்டும் தனித்துவமாக காட்சி அளிக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் இந்த அழகு சாதனங்களை பயன்படுத்துவது.

பெண்களுக்கான அழகு குறிப்புகள் 

அழகான பாதம் பெற 


பெண்கள் தங்களின் அழகான பாதத்திற்கு  மேலும் அழகு சேர்க்க அனுதினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு,  ஒரு பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர், உப்பு,  எலுமிச்சைச்சாறு மற்றும் ஷாம்பு போட்டு கலக்கவும். கலக்கிய நீரில் பாதங்களை விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு நல்ல பிரஷ் கொண்டு சுத்தம்  செய்யவும்.  இதனால் பாத த்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் பாத த்தில் உள்ள அழுக்குகள், கிருமிகள் நீங்கும். இதனால் அழகான பாதங்களை பெற முடியும். பார்ப்பதற்கு சினிமா நடிகை பாதம் போன்று பளபள வென்று இருக்கும்.
இந்த முறையை வாரம் 2 அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்வதன் மூலமாக மிக அழகான பாதங்களை பெற முடியும்.
pengalukkana alagu kurippugal

அவ்வாறு பாதங்களை நன்றாக பிரஸ் கொண்டு சுத்தம் செய்த பிறகு ஒரு மெல்லிய துணியில் ஈரம் போக துடைத்து நல்லெண்ணைய் எடுத்து சூடு பறக்க தேய்த்து விடலாம். இதனால் பாதங்களில் உள்ள வலி போவதோடு, பாதங்கள் மினுமினுப்பைப் பெறும்.

கண்கள்  கருவளையம் நீங்க - பெண்களுக்கான அழகு குறிப்புகள்


பொதுவாக பெண்களுக்கு கண்ணுக்கு கீழ் கருப்பு வளையம் வந்தால் பார்ப்பதற்கு அசிங்கமாக உள்ளது என நினைப்பர். இதனால் பார்வைக்கு மிக வயதானவர்கள் போன்ற தோற்றத்தினை பெறுவர்.   இந்த பிரச்னையை தீர்க்க இயற்கை வழியில் ஒரு அருமையான மருந்து உண்டு. அதை என்னவென்று தெரிந்துகொள்வோம்.

நான் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலிருந்தே "கண் கருவளையம்" நீக்கி விடலாம். அதற்கு வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சரி பங்கு எடுத்து, மிக்சி அல்லது அம்மியில் மைய அரைது, அந்த பசையை எடுத்து கண்ணின் கருவளையத்தை சுற்றி பூசி வர, மிக விரைவில் கண்ணின் கருவளையம் நீங்கி, அற்புதமான தோற்றத்தினை பெறலாம்.

மேலும் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை எடுத்து, அதை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைக்க வேண்டும். அதன் மீது மேற் குறிப்பிட்டவாறு அரைத்த கலைவை பூச வேண்டும். அதன் பிறகு குறைந்த பட்சம் அரைமணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். இதை தொடர்ந்து 5 நாட்கள் செய்தால் கண் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

பார்ப்பதற்கு கண்கள் ஒரு மாடலிங் துறையைச் சேர்ந்த பெண் போல மிக அழகாக காட்சி அளிக்கும்.

கழுத்து கருமை போக்க - பெண்களுக்கான அழகு குறிப்புகள்


சில பெண்களுக்கு கழுத்துச் சுற்றி கருமையான நிறம் மையைப் பூசியது போல காணப்படும். முகம் மாநிறமாக இருந்தாலும், சூரிய வெளிச்சம், கழுத்தில் அணியும் அணிகலன்கள், தாலி போன்ற கயிறுகளின் மூலம் ஏற்படும் உராய்வு, அழுக்கு, வியர்வை துளிகள் என அனைத்தும் சேர்ந்து கழுத்தில் கருமையான பற்று போட்டது போன்ற தோற்றத்தை உண்டாக்கியிருக்கும். இது பார்ப்பதற்கு மிக அருவருப்பாக இருக்கும்.

இந்த "கழுத்து கருமை" யைப் போக்க ஒரு அற்புதமான மருந்து உள்ளது. வீட்டில் உள்ள பொருள் கொண்டு சரி செய்திடலாம். ஒரு கப்பில் சிறிதளவு கோதுமை மாவை எடுத்துக்கொண்டு, அதில் வெண்ணை சேர்த்து பேஸ்ட் போல கலக்க வேண்டும். கலந்து கொண்ட பசையை எடுத்து கழுத்தைச் சுற்றியுள்ள கருமை நிற  பகுதியில் நன்றாக பூசி 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஊற விட வேண்டும்.

பிறகு குளித்து விட வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் ஒரு வாரத்தில் கழுத்து கருமை பெருமளவு குறைந்து, கழுத்து பார்ப்பதற்கு சங்கு போன்று வெண்மை நிறத்தில் மின்னும்.

கண்கள் அழகு பெற 

உங்கள் சினிமா நடிகை போல அழகாக காட்சி அளிக்க இதுபோல செய்து பாருங்கள். அன்றாடம் உணவில் தக்காளியை பச்சையாக சேர்த்துக்கொள்ள வேண்டும். தினம் 2 தக்காளிப் பழங்களை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி உண்டு வந்தால், கண்கள் தக்காளிப் பழம் போல பள பள தோற்றத்தைப்பெறும்.

கண்கள் பளப்பாகவும், பொலிவுடன் காட்சித் தர திராட்சை உதவுகிறது. திராட்சைப் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கண்களில் அழுக்கு நீங்கி, கண்கள் புதுப்பொலிவு பெற, தூங்குவதற்கு முன்பு இரவு சேரத்தில் இரண்டு சொட்டு விளக்கெண்ணையை விட்டு வர கண்கள் மின்னல் போல பிரகாசிக்கும்.

வெள்ளரிக்காய்: 


கண்கள் குளுமைபெற இதைப் பயன்படுத்தலாம். அழாகாக வட்ட வடிவத்தில் வெள்ளரியை மீடியம் சைசில் வெட்டி, கண்களை மூடி சுற்றி பேக் போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சி மற்றும் பிரகாசம் கிடைக்கும்.

மேற்குறிப்பிட்ட பெண்களுக்கான அழகு குறிப்புகளை செய்து பாருங்கள். சிறந்த பயனை கொடுக்கும்.

Post a comment

0 Comments