இரத்த சோகை - அறிகுறிகள் - மருத்துவம்

நம் உடலில் இரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அல்லது இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதை இரத்த சோகை என்கிறோம். திசுக்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் வேலை செய்பவை ஹீமோகுளோபின். இது ஒரு இரும்பு சத்துமிக்க இரத்த புரதப் பொருளாகும். இதனை ஆங்கிலத்தில் RBC என சுருக்கமாக அழைப்பர்.

இரத்த சோகை எப்படி ஏற்படுகிறது?


ஒருவரின் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவுக்கதிகமாக குறையும்பொழுது இரத்த சோகை ஏற்படுகிறது. தெளிவாக சொல்ல வேண்டுமானால், உடலில் உள்ள திசுக்களுக்கு போதுமான ஆக்சிஜன் கொடுப்படாத நிலைதான் "இரத்த சோகை". இதனால் உடல் வெளிறிப்போகும். உடல் மிக சோர்ந்து போகும். உடல் மிக பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

இரத்த சோகை - மருத்துவம்

ஆரம்ப நிலைகளில் உணவில் போதுமான மாற்றம் செய்வதன் மூலம் சரி செய்யலாம். இரும்பு சத்துமிக்க உணவு, காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் சாதாரணமாக இரத்த சோகை மறைந்து, நல்ல உடல் நலம் பெற்றுவிடலாம்.

இது அதி தீவிரமான நிலையில் தான் மருத்துவர் சிகிச்சையை மேற்கொள்வார்.

anemia cause and treatment


எப்படி இரத்த சோகையை கண்டறிவது? 

எனக்கு உடல் களைப்பாக உள்ளது. அதிக சோர்வுடன் காணப்படுகின்றேன். எனக்கு இரத்த சோகை உள்ளதா? என பலரும் கேட்கின்றனர். சில பொதுவான காரணங்களால் அப்படி ஆவதுண்டு.


இரத்த சோகைக்கான அறிகுறிகள்:


இரத்தில் உள்ள ஹீரோம குளோபின் குறைவதால் உடல் வெளிறி காணப்படும்.

தேவையான அளவு ஆக்சிஜன் இல்லாமையால் உடல் அசதியுடன் காணப்படுதல்.

உடலில் தேவையான அளவு ஆக்சிஜன் இல்லாமையால் எந்த ஒரு எளிதான வேலையை செய்தாலும், அதிகளவு மூச்சு வாங்குதல்.

இந்த அறிகுறிகளை வைத்து இரத்தில் இரும்பு சத்து குறைந்துள்ளதா? இரத்தசோகை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியலாம்.

இரத்தசோகை ஒரு சில நேரங்களில் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். புற்றுநோய், எய்ட்ஸ், காமாலை போன்ற நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது இரத்த சோகை உருவாகும். முதலில் இரத்தம் குறைவாக உள்ளதா, இல்லையா என ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

இரத்த சோகையை சோதிக்க எளிய வழி


இரத்த சோகையை வீட்டில் நாமாகவே சோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம். கண்களின் கீழ் இமையை கீழே இழுத்துப் பார்த்தால் உள்ளே இருக்கும் பகுதியில் இரத்த சிவப்பு இருந்தால் இரத்து சோகை இல்லை என்பதை உறுதி செய்யலாம். அது நிறமற்றுக் காணப்பட்டால் நிச்சயமாக உடலில் இரத்த சோகை உள்ளது என புரிந்துகொண்டு, சரியான மருத்துவரை அணுகி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

ratha sogai

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களின் கை விரல்களை அழுத்திடும்பொழுது எந்த ஒரு மாற்றமும் ஏற்படால் வெள்ளையாக இருந்தால் அவருக்கு இரத்த சோகை இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். இயல்பான நிலையில் இருக்கும் ஒருவருக்கு விரல்களை அழுத்திடும்பொழுது இரத்தமானது நுனி விரல்களுக்கு வந்து சிவப்பாக காட்சியளிக்கும். அப்படி இல்லையென்றால் கடுமையான இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.

இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகளவு மூச்சு வாங்கும். இரத்தில் போதுமான ஆக்சிஜன் இல்லாமல் இருப்பதால் இந்த விளைவு உருவாகிறது.

இரத்த சோகை கண்டோருக்கு அதிக படபடப்பு இருக்கும். மூச்சுத் திணறல் ஏற்படும். இதயம் படபடப்புடன் இருக்கும். இந்த அறிகுறிகளை வைத்து ஒருவருக்கு இரத்த சோகை இருக்கிறதா என்பதை உறுதிசெய்யலாம்.

மேலும் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடன் இந்த அறிகுறிகளைக் கூறி, அதுதொடர்பான இரத்த சோதனை எடுத்துப் பார்ப்பது நலம் தரும்.


ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் விளைவுகள் 


இதன் அளவு மிக குறைந்து காணப்பட்டால் , தூங்கி எழுந்தவுடன் காலையில் மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும். வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவை ஏற்படும். உடல் சோர்ந்து காணப்படும். மேலும் அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் போதிய இரத்தம் இல்லாததால் மூளைக்குத் தேவையான இரத்தம் செல்லாமல் தலைவலி உணர்வை ஏற்படுத்திடும்.

இரத்த சோகை மருத்துவம் 

இரத்த சோகைக்கு நல்ல தரமான மருத்துவம் பார்த்துக்கொண்டால் அது ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும். இரும்புச் சத்துள்ள கீரைகள் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு இரத்த சோகை நீங்க முருங்கைக்கீரை, ஆரைக் கீரை, அரைக்கீரை, புதினா கொத்தமல்லி, கறிவேப்பிலை அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழ வகைகளையும் கொடுத்து வர வேண்டும். இதனால் வெகு விரைவில் அவர்களுக்கு இரத்த விருத்தி அடைந்து, இரத்த சோகை நீங்கும்.

இரத்து சோகை நீங்க கேழ்வரகு


கேழ்வரகு ஒரு அற்புதமான உணவு. குழந்தைகளுக்கு கேழ்வரகு பால் எடுத்து கொடுக்க எலும்புகள் பலப்படும். துரித வளர்ச்சி அடைவர். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து சுறுசுறுப்புடன் காணப்படுவர். கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்க குழந்தைகள் வளர்ச்சி அபரிதமாக இருக்கும். குடற்புண் உள்ளவர்கள் கேழ்வரகு கஞ்சி வைத்து சாப்பிட, வெகு விரைவில் அல்சர் குணமடையும்.

இரத்த அளவு   • இயல்பாக ஆண்கள், பெண்கள் ஆகியவர்களுக்கு ஆண்களுக்கு: 100 மி.லி. இரத்தத்தில் 14.5 முதல் 15.5 கிராம்களும்,
  • பெண்களுக்கு: 100 மி.லி இரத்தத்தில் 13.4 முதல் 14.5 கிராம்களும் இருக்க வேண்டும். அப்படியில்லாமல்,
  • குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் 5 வயது வரை: 11 கிராமுக்கு குறைவாகவும்
  • 6 வயது முதல் 14 வயது வரை: 12 கிராமுக்கு குறைவாகவும்,
  • பெரியவர்களான ஆண்களுக்கு: 13 கிராமுக்கு குறைவாகவும்
  • பெண்களுக்கு: 12 கிராமுக்கு குறைவாகவும்
  • கர்ப்பிணிகளுக்கு: 11 கிராமுக்கு குறைவாகவும் இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.

Post a comment

0 Comments